Friday 13 November 2015

க்வென்டின் டாரன்ட்டினோ The Hateful 8 காமிக்ஸ்

டியர் காமிரேட்ஸ்,
மாடஸ்டி ப்ளைசின் அதி தீவிர ரசிகரான இயக்குநர் க்வென்டின் டாரன்ட்டினோ தனது திரைப்படங்களை சார்ந்த காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டு வருகிறார். அவரது சமீபத்திய படமான ஜாங்காவைச் சார்ந்து இரண்டு காமிக்ஸ் புத்தகத் தொடர்கள் வெளியாகின. ஒன்று திரைப்படத்தின் கதையை அப்படியே காமிக்ஸ் கதையாக வழங்கிய தொடர். 
இரண்டாவது, திரைப்படத்தின் க்ளைமாக்ஸிற்கு பிறகு ஜாங்கோ என்ன செய்கிறான்? என்பதைப் பற்றியது. (அதன் பின்னர் ஜாங்கோ இன்னுமொரு திரைப்பட / காமிக்ஸ் ஹீரோவான ஸாரோவோடு இணைந்து ஒரு புதிய சாகசத்தை மேற்கொள்கிறார் - Django Vs Zorro). இந்தக் காமிக்ஸ் தொடர்கள் இரண்டையும் டைனமைட் நிறுவனம் வெளியிட்டது.
 
க்வென்டின் டாரன்ட்டினோவின் அடுத்த திரைப்படம் The Hateful 8 இவ்வாண்டு டிசம்பரில் Christmas அன்று வெளியாகிறது. வழக்கமாக படத்தின் Preview / Trailer போன்றவை காணோளி வடிவில் தான் வரும். ஆனால் The Hateful 8ஐ சந்தைப்படுத்தும் விதத்தில் க்வென்டின் டாரன்ட்டினோஒரு 8 பக்க காமிக்சை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த அட்டகாசமான காமிக்ஸ் முன்னோட்டத்தை ஓவிய வடிவில் நமக்கு வழங்கி இருப்பவர் ஓவியர் ஜாக் மேயர். இந்த காமிக்ஸ் முன்னோட்டத்திற்கு வசனம் நமது க்வென்டின் டாரன்ட்டினதான் என்பதால், அவரது வழமையான ஸ்டைலில்தான் வசனங்கள் “சிறப்பாக” வந்துள்ளது.

இந்த முன்னோட்டத்தை வெளியிட்டு இருப்பது உலகப்புகழ் பெற்ற PlayBoy பத்திரிகையாகும். இத்தொடரின் முதல் பக்கம் இதோ:


 இரண்டாவது பக்கம்:


 மூன்றாவது பக்கம்:
நான்காவது பக்கம்:
ஐந்தாவது பக்கம்:
ஆறாவது பக்கம்:
ஏழாவது பக்கம்:
எட்டாவது மற்றும் கடைசி பக்கம்:
நன்றி ப்ளேபாய், நன்றி ஸாக் மேயர், நன்றி டாரன்ட்டினோ.

3 comments:

  1. சுவாரசியமான பதிவு.. எனக்கும் டாரன்ட்டினோ படங்கள் பிடிக்கும்.. அவரும் ஒரு காமிக்ஸ் ரசிகர் என்பதில் மகிழ்ச்சி.. அவரது Trademark வசனங்களில் காமிக்ஸ் Trailer சூப்பர்.. டாரன்ட்டினோவின் Reservoir Dogs மிகவும் பிடிக்கும்.. அவரின் வன்முறை + சுவாரஸ்ய திருப்பங்கள் + சுவாரஸ்ய வசனங்களின் கலவை அருமையாக இருக்கும்

    ReplyDelete
  2. Co inc எனுறுதான் சொல்ல வேண்டும்.நேற்றுதான் இப்படத்தை பார்க்க பிரயத்தனப்பட்டு நேரமின்மையால் தோற்றுப்போனேன்..!பதிவின் தொகுப்பு அருமை

    ReplyDelete