Wednesday 25 February 2015

காமிக்ஸ் ஹீரோக்கள் 16

டியர் காமிரேட்ஸ்,

வியாபார நிமித்தமாக ஊர் ஊராக அலைந்து திரிந்த ஒருவர் காமிக்ஸ் பதிப்பகம் ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்து நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து ஆரம்பிக்கிறார். அவர் செய்த வேலை என்ன தெரியுமா? தன்னுடைய பயணத்தில் தான் சந்தித்த நபர்களை எல்லாம் கதாபாத்திரங்களாக கொண்டு ஒரு தொடரை ஆரம்பித்தது தான்.

இந்த தொடருக்கு ஓவியராக வந்தவரும் லேசுப்பட்டவர் இல்லை. இவரும் தன் பங்கிற்க்கு தனது முன்னாள் நண்பி, தான் வரைந்த ஆட்கள் என்று அவரும் நிஜ வாழ்க்கையில் சந்தித்த நபர்களை எல்லாம் கதாபாத்திரமாக மாற்ற, ஒரு புதிய காமிக்ஸ் தொடர் ஆரம்பம் ஆனது. அப்படி அன்றாட வாழ்வில் நாம் பார்த்திருக்ககூடிய நபர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தொடர் நிச்சயமாக மக்களை கவர்ந்திருக்க வேண்டுமல்லவா? 

உலகம் எங்கும் ரசிக்கப்படும் இந்த தொடர் தமிழில் அதிகம் வெளிவரவில்லை என்பது சோகத்தின் உச்சம். அது மட்டுமல்ல, உலக அளவில் விற்பனையில் தொடர்ந்து சாதனை படைக்கும் இந்த காமிக்ஸ் தொடர், தற்போது இந்தியாவில் நேரடி விற்பனைக்கும் கிடைக்கிறது. 

MB Teaser

தி இந்து தமிழ் நாளிதழின் மாயா பஜார் இணைப்பின் காமிக்ஸ் ஹீரோக்கள் பகுதியில் இவ்வார கட்டுரையை படித்து முழுக்கதையையும் தெரிந்து கொள்ளுங்கள்.

நமக்கு எல்லாம் நன்கு பரிச்சயம் ஆன காமிக்ஸ் கதாநாயகர்களை ஒரு மறு அறிமுகம் செய்யும் இப்பகுதியில் இன்று உலகம் ரசிக்கும் ஒரு  இளைஞனைப் பற்றிய சிறு அறிமுகம் வெளியாகியுள்ளது.

Mayabazaar logo

இந்த பகுதியின் சிறப்பே அட்டகாசமான ப்ரொஃபைல் படங்கள் + கண்ணை கவரும் லேஅவுட் டிசைன் தான்.

ஆகவே, நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ......

வேறென்ன, தென்னிந்தியாவில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு என்று ஆறு பதிப்புகளை கொண்ட தி ஹிந்து தமிழ் நாளிதழை வாங்கி இந்த கட்டுரையை படிக்கவேண்டியதுதான்.

Wednesday 11 February 2015

குமுதம் தீராநதி – பிப்ரவரி 2015 – கிராபிஃக் நாவல் விமர்சனம்

1995ஆம் ஆண்டு. ஒரு புதிய ஓவியர் தன்னுடைய காமிக்ஸ் / கிராபிஃக் நாவலை வெளியிடுகிறார். புதிய படைப்பாளி, அதிகம் பரிச்சயமில்லாத பதிப்பகம், எந்தவிதமான விளம்பரமும் இல்லாத சூழல் என்று பல தடைகள் இருந்தாலும் அந்த புத்தகம் பேசப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து அதே கதாசிரியரின் அடுத்த படைப்பு வெளியானபோது அமெரிக்காவே இவரை திரும்ப பார்த்தது. ஆனால் தன் மீது படிந்த அந்த புகழ் வெளிச்சத்தை நாடாமல் திடீரென காமிக்ஸ் துறையில் இருந்து விலகி தனக்கு பிடித்தமான பச்சை குத்துவதை தொடர சென்று விட்டார்.

அடுத்து பல ஆண்டுகளில் காமிக்ஸ் ரசிகர்களுக்கு அவரும், அவரது இரண்டு படைப்புகளுமே பல மழைக்கால மாலைநேரங்களின் விவாதப்பொருளாக இருந்து வந்தது. புகழின் உச்சத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பத்திலேயே முடித்துக்கொண்ட அந்த கதாசிரியர் சுமார் 17 ஆண்டுகள் கழித்து மறுபடியும் திரும்ப வந்து ஒரு கிராபிஃக் நாவலை படைக்கிறார் என்றால் அதன்மீதான ஆர்வம் எப்படி இருக்கும்? அல்லது அவரை திரும்ப வரவழைத்த அளவுக்கு அந்த கதை எப்படிப்பட்டதாக இருக்கும்?

Kumudam Theera Nathi Tamil Literary Magazine Issue Dated Feb 2015 Cover

  • யார் அந்த படைப்பாளி?
  • ஐஸ்னர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட அவரது கிராபிஃக் நாவலின் பெயர் என்ன?
  • இந்த நாவலில் இவர் செய்த புதுமை என்ன?
  • உலகமே பேச தயங்கிய காமிக்ஸ் அரசியலை இவர் எப்படி தைரியமாக முன்வைத்தார்?

இவருடனான உரையாடலில் இவர் தெரிவித்த கருத்துக்களை முன்வைத்து எழுதப்பட்ட இந்த நான்கு பக்க விமர்சனம் இம்மாத குமுதம் தீராநதி இதழில் வெளிவந்துள்ளது.

Kumudam Theera Nathi Tamil Literary Magazine Issue Dated Feb 2015 Index

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை தெரிவிக்க மறந்துவிடாதீர்கள்.

காமிக்ஸ் ஹீரோக்கள் 14

டியர் காமிரேட்ஸ்,

”வேண்டா வெறுப்பாக புள்ளையை பெத்துட்டு அதுக்கு காண்டாமிருகம் என்று பெயர் வைத்த” கதையை கேள்விபட்டு இருக்கிறீர்களா?

உலகமெங்கும் 76 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் ஒரு கார்ட்டூன் தொடர் அதன் படைப்பாளிகளால் விருப்பமில்லாமல் தான் உருவாக்கப்பட்டது என்பதை நம்பமுடிகிறதா?

உலகம் எங்கும் ரசிக்கப்படும் இந்த தொடர்

  • அதீத வன்முறை
  • இனவாதம்
  • ஸ்டீரியோடைப்பிங்

போன்றவற்றுக்காக பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டது / தணிக்கை செய்யப்பட்டது என்பதை நம்ப முடிகிறதா? 

இன்றுமுதல் இரண்டாவது சீசனை துவக்கியுள்ள தி இந்து தமிழ் நாளிதழின் மாயா பஜார் இணைப்பின் காமிக்ஸ் ஹீரோக்கள் பகுதியில் இவ்வார கட்டுரையை படித்து முழுக்கதையையும் தெரிந்து கொள்ளுங்கள்.

MB Teaser

நமக்கு எல்லாம் நன்கு பரிச்சயம் ஆன காமிக்ஸ் கதாநாயகர்களை ஒரு மறு அறிமுகம் செய்யும் இப்பகுதியில் இன்று உலகம் ரசிக்கும் ஒரு கார்ட்டூன் ஜோடியை பற்றிய சிறு அறிமுகம் வெளியாகியுள்ளது.

இந்த பகுதியின் சிறப்பே அட்டகாசமான ப்ரொஃபைல் படங்கள் + கண்ணை கவரும் லேஅவுட் டிசைன் தான்.

Mayabazaar logo

ஆகவே, நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ......

வேறென்ன, தென்னிந்தியாவில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு என்று ஆறு பதிப்புகளை கொண்ட தி ஹிந்து தமிழ் நாளிதழை வாங்கி இந்த கட்டுரையை படிக்கவேண்டியதுதான்.

பின் குறிப்பு: யார் அந்த கார்ட்டூன் ஜோடி என்று யூகிக்க முடிகிறதா?

க்ளூ 1: இவர்கள் சாகசத்தை ரசிக்க மொழி ஒரு தடையே கிடையாது.

க்ளூ 2: இந்தியாவில் ஒளிபரப்பான கார்ட்டூன் தொடர்களில் முன்னோடி இது

க்ளூ 3: அட, போங்க சார், இதுக்கு மேலே சொன்னால் ரொம்ப சுலபமாகி விடும்.