டியர் காமிரேட்ஸ்,
இன்று தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் ஒரு
முக்கியமான நாள். ஏனென்றால் ஆனந்த விகடன் நிறுவனத்தின் புதிய இம்ப்ரிண்ட்
ஆன “விகடன் கிராபிஃஸ்” இன்று அறிமுகம் ஆகிறது. அடுத்த மாதம் ஒன்றாம் தேதி
முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்தப் புத்தகம் நிச்சயமாக வாசிப்பில் ஒரு புதிய
பாதையை உருவாக்கும் என்றே நம்புகிறேன்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற (காவல் கோட்டம் புகழ்) எழுத்தாளர் திரு சு.
வெங்கடேசன் அவர்களின் கதைக்கு, வண்ணமயமாக உயிரூட்டி இருக்கிறார் கோவையை
சேர்ந்த ஓவியரான பாலஷண்முகம்.
காலத்தால் அழிக்க முடியாத புகழை பெற்ற ஒரு தலைவருக்கு இரண்டு மனைவிகள்.
முறையே இரண்டு மகன்கள். மூத்தவன் இருக்க, இளையவனே சிறந்தவன் என்று தந்தை
கருத, அதனால் மூத்த மனைவியின் மகன் செய்யும் சதித் திட்டங்கள் நாட்டையே
நிலைகுலைய வைக்கிற அளவிற்கு போகிறது. அந்த சதித் திட்டங்களை எல்லாம் எப்படி
இளைய மகன் சமாளிக்கிறான் என்பதை வீரம், அன்பு, பாசம், காதல் என்று
நவரசங்களையும் கலந்து உருவாக்கப்பட்ட கதையே சந்திரஹாசம்.
நான்கு மாதங்களுக்கு முன்பாக விகடன் அலுவலகத்திற்கு சென்ற போது, ஆசிரியர்
குழு இதைப்பற்றி ஆர்வமாக, சிலாகித்து பேசினார்கள். அப்போது முதல், இந்த
இதழ் எப்போது கைக்கு வரும் என்று எதிர்பார்க்க வைக்கும் விதமாக சிறப்பாக
விளம்பரம் செய்யப்பட்டு வந்து, இதோ இன்று முதல் டீசர் ஆரம்பம்.
இளைய தளபதி விஜய்யின் புலி படத்தின் இடைவெளியில் இந்த சந்திரஹாசத்தின்
விளம்பரம் இணைக்கப்பட்டு உள்ளது. ஆகவே, அனைவரின் கவனத்தையும் இது கவரும்
என்றே எதிர்பார்க்கப்படுகிறது. புத்தகத்தின் முதல் விமர்சனம் நமது தமிழ்
காமிக்ஸ் உலகம் தளத்திலிருந்து விரைவில் வெளியாகும்.
நவம்பர் மாதம் வெளியாகவுள்ள இந்த புத்தகத்தை நீங்கள் இப்போது
முன்பதிவு செய்யலாம். 150+ பக்கங்களைக் கொண்ட இந்த அருமையான முழுவண்ண
புத்தகத்தை முன்பதிவு மூலமாக பெற நீங்கள் வெறும் ஐந்நூறு ரூபாய் மட்டுமே
செலுத்த வேண்டியிருக்கும். முந்துங்கள். இந்த புத்தகத்தின் விலை 1, 499/- ஆனால் முன்பதிவு திட்டத்தின் கீழ் 999/- மட்டும் செலுத்தினால் போதும். மேலும் அக்டோபர் மாத இறுதிக்குள்ளாக முன்பதிவு செய்தால், ஒரு அட்டகாசமான காணொளி புத்தகம் இலவசம்.
ஒரு அட்டகாசமான வரலாற்றுப் பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லவிருக்கும் விகடன் குழுமத்திற்கும், தீவிர காமிக்ஸ் இரசிகரான குழும எம்.டி அவர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்.
ஒரு அட்டகாசமான வரலாற்றுப் பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லவிருக்கும் விகடன் குழுமத்திற்கும், தீவிர காமிக்ஸ் இரசிகரான குழும எம்.டி அவர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்.

To Pre-Order this book in Online.
ReplyDeletehttp://www.wecanshopping.com/products/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%252d-Tamil-%28Hardbound%29.html
தகவலுக்கு நன்றி!
ReplyDelete// முன்பதிவு மூலமாக பெற நீங்கள் வெறும் ஐந்நூறு ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.//
// முந்துங்கள். இந்த புத்தகத்தின் விலை 1, 499/- ஆனால் முன்பதிவு திட்டத்தின் கீழ் 999/- மட்டும் செலுத்தினால் போதும்//
நாம் செலுத்த வேண்டிய தொகை 500-ஆ, 999-ஆ?
999/-.
Deleteஇப்போதைக்கு 50, ஆயிரம் முன்பதிவுகளை நெருங்கியுள்ளது.
முன்பதிவு தேதி நவம்பர் 15 வரை நீட்டீக்கப்பட்டுள்ளது.