Monday 28 September 2015

James Bond 007 VAGR Virgin Edition

டியர் காமிரேட்ஸ்,

இந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி ஜேம்ஸ்பாண்டின் அடுத்த திரைப்படம் வெளிவருவதையொட்டி, புதிய காமிக்ஸ் தொடர் ஒன்றை அமெரிக்காவின் டைனமைட் நிறுவனம் வெளியிடவுள்ளதை ஏற்கனவே அறிவித்திருந்தேன். அதன் விலை 3.99 டாலர்கள் என்பதையும் சொல்லி இருந்தேன். ஆனால், இப்போது புதியதாக ஒரு விஷயத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.



உலக அளவில் காமிக்ஸ் விற்பனையை தூண்ட, Variant Covers என்ற பெயரில் ஒரே கதைக்கு நான்கு, ஐந்து அட்டைப்படங்களை வெளியிடுவது சமீபத்தில் நடந்து வரும் ஒரு விஷயம். அதாவது, ஒரு வாசகன் எப்படியும் ஒரு புத்தகத்தை வாங்கி விடுவான். ஆனால், ஒரு இரசிகன் (ஒரே கதையை, வித்தியாசமான அட்டைப்படங்களுக்காக) அனைத்து புத்தகங்களையும் வாங்க முயல்வான். இதனால் விற்பனை கணிசமான அளவில் பெருகும். சமீபத்தில் The Phantom வேதாளர் கதைக்கு இப்படி ஒரு யுத்தியை நண்பர் டேனியல் ஹெர்மன் கையாண்டதை சொல்லியிருந்தேன்.
இதே போல, இன்னொரு யுத்தியும் இருக்கிறது. அதற்கு பெயர் Virgin Edition. இதில் நிறுவனத்தின் பெயரோ, கதையின் பெயரோ வேறு எதுவுமே இருக்காது. ஓவியத்தை முழுவதுமாக இரசிக்க நினைப்பவர்களுக்காக இப்படி ஒரு புத்தகத்தையும் வெளியிடுகிறார்கள். 



நமது ஜேம்ஸ் பாண்ட் கதைக்கும் இப்படி ஒரு வர்ஜின் எடிஷனை தயார் செய்து உள்ளார்கள். இந்த அட்டைப்படத்தை வரைந்தவர் க்ளென் கார்பி என்ற ஓவியர். என்ன, விலை தான் சற்றே கூடுதல். ஆமாம், வழக்கமான புத்தகம் 3.99 டாலர்களுக்கு கிடைக்கும் போது, இந்த ஸ்பெஷல் எடிஷனின் விலை மட்டும் 50 டாலர்கள். 



என்ன ஒரு வியாபார தந்திரம்?


சரி, இதே நேரத்தில் புத்தகம் எப்படி இருக்கும், ஓவியங்கள் எப்படி இருக்கும் என்பதை இரசிக்க, இதோ சில பல பக்கங்கள். 

பதிப்பாளர்: டைனமைட்
தொடரின் பெயர்: VARGR
கதாசிரியர்: வாரன் எல்லிஸ்
ஓவியர்: ஜேசன் ராபர்ட்ஸ்
மொத்த பாகங்கள்: 5
பக்கங்கள்: 32
முதல் இதழ் வெளியாகும் நாள்: நவம்பர் 4, 2015.
விலை: 3.99 டாலர்.

கதைச்சுருக்கம்: ஜெர்மன் நகரமான ஹெல்சின்க்கியில் ஒரு பழி வாங்கும் படலத்தை வெற்றிகரமாக முடிக்கிறார் ஜேம்ஸ் பாண்ட். ஆனால், அதே சமயம் இலண்டனில் ஒரு ”டபுள் ஓ” ஏஜெண்ட் கொல்லப்பட, அவரது பணியை முடிக்க ஜேம்ஸ் வரவழைக்கப்படுகிறார். அதே சமயம் பெர்லினில் அவருக்கு எதிராக ஒரு சதித் திட்டம் தீட்டப்படுவதாக முதல் இதழ் செல்கிறது.

No comments:

Post a Comment