Sunday, 16 February 2014

XIII மிஸ்ட்ரி

காமிரேட்ஸ்,


உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற இரத்தப்படலம் தொடரின் (அப்போதைய 19 பாகங்களுக்கு பின்னர்) முடிவுக்கு பின்னர், அந்த ப்ராண்ட்'ஐ வைத்து கல்லா கட்ட நினைத்த அந்த பதிப்பகத்தார்,   XIII மிஸ்ட்ரி என்ற பெயரில் தனி வரிசையை (Series) ஆரம்பித்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கதாபாத்திரத்தின் பின்னணிக்கதை என்பது தான் இந்த வரிசையின் நியதி.

ஆனால் இந்த தொடரின் ஒரிஜினல் கதாசிரியரும், ஓவியரும் இந்த வியாபார யுத்தியில் பங்கேற்காததால் புதிய கதாசிரியர்களையும், ஓவியர்களையும் கொண்டே இந்த தொடர் அமைந்து இருந்தது. அதன்படி ஒவ்வொரு இதழுக்கும் ஒரு புதிய கதாசிரியர் ​ + ஓவியர் கூட்டணி என்று அமைத்து புதிய தொடரை 2008ம் ஆண்டு ஆரம்பித்தனர்.

புதியதாக அமைந்த ஆட்சி பற்றி மக்களிடம் ஓரளவுக்காவது பரபரப்பான பேச்சு இருக்கத்தானே செய்யும்? அதன்படி மங்கூஸ், ஜோன்ஸ் என்று வந்த ஆரம்ப கதைகள் வெற்றி பெற்றாலும் பின்னர் தான் இந்த தொடரில் பின்னணி கதை மாந்தர்கள் மிகவும் குறைவு என்பது பதிப்பகத்தார்க்கு நிதர்சனமாக உரைத்தது.

அதானலேதான் இப்போது அதே இரத்தப்படலம் தொடரின் மைய கதையோட்டத்தை தழுவி மறுபடியும் ஒரு புதிய தொடரை ஆரம்பித்து, அதில் ஹீரோ XIII க்கு மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து ஒரு புதிய களனை அமைத்து இயங்க வைத்துள்ளார்கள். இந்த புதிய கதை தொடரின் புதிய பாகங்கள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் ஃப்ரான்சில் வெளியாகும். அப்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிவந்த இரண்டு ஆல்பங்களைத்தான் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நாம் லயன் காமிக்ஸில் இரத்தப்படலம் - தொடரும் ஒரு தேடல் என்று வெளியிட்டார் எடிட்டர் எஸ்.விஜயன் அவர்கள்.

ஆனால் ஒரிஜினலாகவே ஃப்ரெஞ்சு மொழியில் வருடத்திற்கு ஒரே ஒரு ஆல்பம் மட்டுமே வெளிவந்துக்கொண்டு இருக்கும் வேளையில், நாமும் அதனைப்போலவே வருடத்திற்கு ஒன்று என்று வெளியிட இயலாது (நம்ம காமிரேட்டுகள் கொதித்து எழ மாட்டார்களா என்ன?).

அதானால் வருடத்திற்கு இரண்டு கதைகளை கொண்ட புத்தகம் ஒன்றை வெளியிட்டு விட்டு அடுத்த ஆண்டு இந்த XIII மிஸ்ட்ரி தொடரின் 2 ஆல்பங்களை வெளியிடலாம் என்று நமது எடிட்டர் முடிவெடுத்து இருக்கிறார். இந்த புதிய தொடரை நமது லயன் முத்து காமிக்ஸின் புதிய இம்ப்ரிண்ட் ஆன சன்ஷைன் ஃக்ராபிக் நாவல் வரிசையில் தமிழில் நாம் படிக்கலாம். இந்த ஆண்டு ஸ்டீவ் ரோலண்ட் மற்றும் மங்கூஸ் ஆகிய இரண்டு கதைகளும் தமிழில் வெளிவர உள்ளன.

அந்த தொடரில் வரும் முக்கியமான பாத்திரங்களின் முன்கதை சுருக்கம் போல இந்த தொடரின் கதைகள் அமைந்து இருக்கும். உதாரணமாக தொடரின் முக்கியமான வில்லராக (மரியாதை தான்) மங்கூசின் பிறப்பு, வளர்ப்பு பற்றியோ அல்லது அவர் எதற்க்காக அப்படி ஒரு வில்லனாக மாறினார் என்பது பற்றியோ நமக்கு தெரியாது. அதனை தெரிவிக்க அவரது பெயரில் ஒரு தனி ஆல்பம் இந்த XIII மிஸ்ட்ரி தொடரில் வந்துள்ளது.

இதைப்போலவே ஸ்டீவ் ரோலண்ட், கேப்டன் ஜோன்ஸ், இரீனா என்று இதுவரை ஆறு ஆல்பங்கள் இதுவரையில் வெளிவந்துள்ளன.

அந்த XIII மிஸ்ட்ரி தொடரில்  நம்ம ஹீரோவுக்கு உதவும் பெட்டியின் கதை இந்த ஆண்டு ஜூன் மாதம் தனி கதையாக ஏழாவது ஆல்பமாக வருகிறது.  அந்த புத்தகத்தின் அட்டையை அதன் கிரியேட்டர் ஸில்வெய்ன் வாலே தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்டு இருந்தார். இதோ அந்த அட்டைப்படம் மற்றும் உள்பக்க படங்கள்:

 

XIII 2

இதுவரையில் அந்த XIII மிஸ்ட்ரி தொடரில் வெளிவந்த மற்ற கதைகளின் விவரங்களும் அதன் அட்டைப்படங்களும்:

XIII 001  XIII 002 XIII 003

XIII 004 XIII 005 Billy Stockton

ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய ஆல்பம் என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக வெளிவந்து கொண்டு இருக்கும் இந்த XIII மிஸ்ட்ரி வரிசையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளிவர இருக்கும் பெட்டி பார்நோவ்ஸ்கி இதழின் ஆசிரியர் மற்றும் ஓவியரின் விவரங்கள்:

XIII 007

இந்த நிலையில் எடிட்டரிடம் ஒரே ஒரு கேள்வி தான்: நாம் இந்த XIII மிஸ்ட்ரி வரிசையில் இருக்கும் அனைத்து கதைகளையும் தமிழில் படிக்கப்போகிறோமா? இல்லை குறிப்பிட்ட / ஹிட் ஆன / கதை நன்றாக இருக்கும் சில ஆல்பங்களை மட்டுமே செலக்ட் செய்து அவற்றை மட்டும்தான் வெளியிடுவீர்களா?