Wednesday, 29 July 2015

கிங் விஸ்வாவின் பரிந்துரை: 2 #KingsChoice ஜூலை 29, 2015

டியர் காமிரேட்ஸ்,

இனிமேல் நான் வாங்கி படித்து மகிழ்ந்த சில பல புத்தகங்களை உங்களுக்கு பரிந்துரைக்கலாம் என்று இருக்கிறேன். அந்த வரிசையில் இரண்டாம் பதிவு:

Brian Froud

தேவதைக் கதைகளின் பைபிள்: ஆலன் மூர், நீய்ல் கெமன் கதைகளை படித்து வளர்பவன் நான் (திரைப்படமாகவும் கூட). ஏனென்றால், இவர்களின் அந்த அதீத கற்பனை, மாயா வினோத உலகங்கள், மந்திர ஜாலங்கள், தேவதைகள் என்று ஒரு அழகான புதியதொரு உலகிற்கு என்னை அழைத்துச் செல்பவை இவையே.

அப்படி இருக்க, சமீபத்தில் இலண்டனில் இருக்கும் ஒரு காமிக்ஸ் கதாசிரியர், படைப்பாளி, எடிட்டருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது தான் அவர் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைச் சொல்லி, இதுதான் தேவதைக் கதைகளின் பைபிள். இதை முதலில் படியுங்கள் என்று பரிந்துரைத்தார். அவரது வாக்கை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, இதோ, ஆர்டர் செய்து விட்டேன்.

இந்த புத்தகத்தின் படைப்பாளி ப்ரையன் ஃப்ரௌட் (https://en.wikipedia.org/wiki/Brian_Froud) பற்றி அழகாக எடுத்துச் சொல்லிய அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி, நன்றி, நன்றி.

தலைப்பு: Good Faeries/Bad Faeries

கதாசிரியர்: Brian Froud

எடிட்டர்: Terri Windling

பதிப்பகம்: Simon & Schuster

பக்கங்கள்: 192

அமைப்பு:  Multi Colour

டிசைன்: 9.2 x 0.9 x 11.2 inches

வெளியான தேதி: October 15, 1998

விலை: 20.81 $

குறிப்பு: ப்ரையன் ஃப்ரௌட் கைவண்ணத்தில் மெருகூட்டப்பட்ட புத்தகம் இது

புத்தகத்தை வாங்க, http://www.amazon.com/Good-Faeries-Bad-Brian-Froud/dp/0684847817

 

Eagle Annuals

2. ஒரு சிறுவர் இதழுக்காக ப்ராஜெக்ட் ஒன்றை எடுத்து இருக்கிறேன். அதற்காக பல பழைய பிரிட்டிஷ் சிறுவர் இலக்கிய புத்தகங்களை தேடிப்பிடித்து வருகையில், இது கண்ணில் பட்டது.

பிரிட்டனின் ஈகிள் காமிக்ஸ் இதழை இன்றும் பலர் நினைவில் வைத்திருக்க காரணம், அந்த இதழில் வெளியான டான் டேர் என்ற அட்டகாசமான காமிக்ஸ் கதையே. ஆனால், அதற்கு அடுத்தபடியாக அந்த இதழில் சிறப்பான இடத்தைப் பிடித்தது ஈகிள் கட் அவேஸ் என்ற ஓவிய சிறப்புகளே.

ஆஷ்வெல் வுட் அவர்களின் மேற்பார்வையில் வெளியான சிலநூறு ஓவியங்களை தொகுத்து, மிகவும் மெனக்கெட்டு சோபியா டோனில் கொண்டு வந்து, அட்டையை கிழிந்த ஒரு பழைய புத்தகம் போல காட்சி அளிக்க வைத்து, ஒரு 60 ஆண்டு பழைய புத்தகத்தை வாங்க வைக்கும் உணர்வை கொடுத்து உள்ளனர். இதற்காக என்ன விலை என்றாலும் கொடுக்கலாம். தவறே இல்லை.

தலைப்பு: The Eagle Annual of the Cutaways

கதாசிரியர்: Assorted

ஓவியர்: L Ashwell Wood & Others

பதிப்பகம்: Orion

பக்கங்கள்: 176

அமைப்பு:  Multi Colour

டிசைன்: 27.7 x 21.6 x 1.5 cm

வெளியான தேதி: 25 September 2008

விலை:Rs 7, 767/-

குறிப்பு: எதற்காக இந்த புத்தகத்தை வாங்கினேன் என்பதை இப்போது கேட்காதீர்கள், ப்ளீஸ்...

புத்தகத்தை வாங்க:

http://www.amazon.in/Eagle-Annual-Cutaways-Daniel-Tatarsky/dp/1409100146

விமர்சனம்? விரைவில்…. மிக விரைவில்.

Saturday, 25 July 2015

நம்ம அடையாளம்: தமிழ் வார இதழ்


டியர் காமிரேட்ஸ்,

திடீரென்று நடக்கும் எந்த ஒரு (நல்ல) விஷயமுமே நம்மிடையே ஒரு கலவையான (அதே சமயம்) சந்தோஷமான ஒரு ரியாக்‌ஷனையே கொணரும். அப்படித்தான் கடந்த ஓரிரு நாட்களாக நூற்றுக்கும் மேலான முகநூல் நட்பு அழைப்புகள். ஏன்? எப்படி? எதற்கு? என்று விளங்கவே இல்லை.


குமுதம் குழுமத்திலிருந்த திரு கோசல்ராம் அவர்கள், லேட்டஸ்டாக துவக்கியுள்ள நம்ம அடையாளம் என்ற தமிழ் வார இதழை நான் முதல் இஷ்யூவிலிருந்தே தொடர்ந்து வாங்கி வருகிறேன்.

 நேற்று இரவு இந்த பத்திரிக்கையின் லேட்டஸ்ட் இதழை வாங்கியபோது, நிஜம்மாகவே ஒரு இன்ப அதிர்ச்சி தான். தமிழ் காமிக்ஸ் உலகம் என்ற என்னுடைய முகநூல் பக்கத்தைப் பற்றி ஒரு பக்கம் முழுக்க அழகாக, தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.


நம்ம அடையாளம் ஆசிரியர் குழுவிற்கு நன்றி

Thursday, 23 July 2015

#KingsChoice 1: ஜூலை 23, 2015

டியர் காமிரேட்ஸ்,

இனிமேல் நான் வாங்கி படித்து மகிழ்ந்த சில பல புத்தகங்களை உங்களுக்கு பரிந்துரைக்கலாம் என்று இருக்கிறேன். அவற்றில் முதல் படியாக, இதோ இந்த வரிசையில் முதல் பதிவு:

Image 1

ஸ்காட் ஸ்னைடர் + ஷான் மர்ஃப்பி இணைந்து மிரட்டிய “தி வேக்”

தலைப்பு: The Wake

கதாசிரியர்: Scott Snyder

ஓவியர்: Sean Murphy

பதிப்பகம்: Vertigo

பக்கங்கள்: 256

அமைப்பு:  Multi Colour

டிசைன்: A4

வெளியான தேதி: 11th Nov 2014.

விலை:1139/-

குறிப்பு: Winner of the 2014 Eisner Award for Best Limited Series.

ஸ்காட் ஸ்னைடர் + ஷான் மர்ஃப்பி இணைந்து மிரட்டிய “தி வேக்” புத்தகத்தை வாங்க, 

http://www.amazon.in/Wake-Scott-Snyder/dp/1401245234/ref=sr_1_1?ie=UTF8&qid=1437657810&sr=8-1&keywords=The+Wake+scott+snyder

The Wake Cover

அடுத்த ஆண்டு திரைப்படமாக வெளியாகவிருக்கும் கதாசிரியர் ரான்சன் ரிக்ஸ்’சின் அட்டகாசமான முதல் நாவலை, ஒரிஜினல் ஆங்கில மாங்காவாக படைத்து இருக்கிறார் ஓவியர் கேஸ்ஸண்ட்ரா ஜீன்.

தலைப்பு: Miss Peregrine's Home for Peculiar Children

கதாசிரியர்: Ransom Riggs

ஓவியர்: Cassendra Jean

பதிப்பகம்: Headline Publishing Group

பக்கங்கள்: 272

அமைப்பு:  B & W, Colour and everything.

டிசைன்: Demi

வெளியான தேதி: 29th Oct 2013

விலை: 962 

குறிப்பு:  Tim Burton is directing this as a Film to be released on 4th March 2016.

இந்தப் புத்தகத்தை வாங்க,

http://www.amazon.in/Miss-Peregrines-Home-Peculiar-Children/dp/0316245283

Miss Peregrine's Home for Peculiar Children Cover

மிக மிக விரைவில் இவற்றின் விமர்சனத்தை அளிக்கிறேன்.

அதுவரை, Happy Reading, ComiRades.

#RIP Tom Moore அன்னாருக்கு அஞ்சலி

டியர் காமிரேட்ஸ்,

காமிக்ஸ், சினிமா மற்றும் கதைகளில் நாம் காணும் அதி புத்திசாலிகளையும், வீர பராக்கிரம நாயகர்களையும் கடந்து அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் சாதாரண, சற்றே சொதப்பலான ஒரு கதாபாத்திரம் நம்மை கவர்வதில் ஆச்சரியமே கிடையாது. அந்த வகையில் இன்றைக்கு உலக அளவில் இளைய தலைமுறை வாசகர்களால் அதிகமாக விரும்பி படிக்கப்படும் காமிக்ஸ் தொடரான ஆர்ச்சியின் கதாநாயகன் ஒரு சாதாரண நடுத்தர இளைஞன் என்பதும், அவனை நமது பக்கத்து வீட்டுக்காரனாக பொருத்தி பார்க்க முடிவதுமே முக்கியமான காரணங்கள்.

Archie Team Profile Picture 4

காமிக்ஸ் கதைகளை வெளியிடுவதற்க்காக ஜான் கோல்ட்வாட்டர் தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து MLJ என்ற பத்திரிக்கை நிறுவனத்தை 1939ல் துவக்கினார். அப்போது ஆன்டி ஹார்டி என்ற திரைப்பட தொடர் இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. அதே பாணியில் ஒரு கதைத்தொடரை உருவாக்க நினைத்த ஜான், பயணங்களில் தான் சந்தித்த நபர்களை மனதில் கொண்டு துணை கதாபாத்திரங்களை உருவாக்கினார்.

Archie Team Profile Picture 3

இப்படியாக ஒரு தொடருக்கான வடிவம் கிடைத்த உடன் கதாசிரியர் விக் ப்ளூம் மற்றும் ஓவியர் பாப் மொண்டானா ஆகியோரைக்கொண்டு 1941ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் ஆர்ச்சி கதாபாத்திரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். வெகுவிரைவில் இத்தொடர் பிரபலமாக, காமிக்ஸ் தொடரின் பெயரையே ஆர்ச்சி காமிக்ஸ் என்று மாற்றிவிட்டார். தன்னுடைய பள்ளி நண்பர்களையும், அவர்கள் புழங்கிய இடங்களையும் மனதில் கொண்டு ஓவியர் மொண்டானாவும் பல கதாபாத்திரங்களை உருவாக்கினார்.

டாம் மூர் & ஆர்ச்சி காமிக்ஸ்: (1928 – 20th July 2015) 86

Tom Moore

இப்படிப்பட்ட ஆர்ச்சி காமிக்ஸ் தொடருக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக உயிரூட்டிய ஒரு அட்டகாசமான ஓவியர் தான் டாம் மூர். 1928ஆம் ஆண்டு அமெர்க்காவின் எல் பாசோவில் பிறந்த இவர், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நியூ யார்க்கில் இருந்த ஓவியப்பள்ளியில் சேர்ந்து முறையாக பயிற்சி பெற்றார் இவர். அப்போது அவருக்கு கற்பித்தவர் யார் தெரியுமா? டார்ஜான் கதாபாத்திரத்திற்கு ஓவியங்கள் மூலமாக உயிரூட்டிய Burne Hogarth தான்.

ஓவியக் கலையை முறையாக கற்ற பின்னர், நியூ யார்க்கிலேயே இவருக்கு ஆர்ச்சி காமிக்ஸ் கதையில் பண்புரியும் வாய்ப்பு 1951ல் கிடைக்க, உடனடியாக அதனை ஏற்றுக்கொண்டார் டாம். இப்படியாக சில பல ஆண்டுகள் நியூயார்க்கில் தங்கி இருந்த இவருக்கு ”நினைவில் காடு இருந்ததை” அவர் மறுபடியும் உணர்ந்து, மலைகள் நிறைந்த தனது சொந்த ஊரான  டெக்சாஸுக்கு 1961ல் திரும்பினார்.

ஜக்ஹெட் ஜோன்ஸ் & டாம் மூர்:

Jughead Jones

அப்போது ஆர்ச்சி காமிக்ஸ் கதைகளில் ஒருவித தொய்வு ஏற்பட்ட் இருந்ததை உணர்ந்த எடிட்டர் விக்டர் கோர்லிக், அதனை எப்படி சரிகட்டுவது என்று சிந்தித்து வந்தார். அவரது சிந்தனையில் தோன்றிய முதல் நபர் டாம் மூர் தான்.

உடனே தொலைபேசியில் அவரை அழைத்த விகடர், சூழ்நிலையை விளக்க, மறுபடியும் ஆர்ச்சி காமிக்ஸ் தொடருக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் டாம்.

ஜக்ஹெட் ஜோன்ஸ் கதாபாத்திர மறு வடிவமைப்பு: ஒல்லியாக இருக்கும் ஜக்ஹெட், எப்படி இவ்வளவு உணவை சாப்பிடுகிறான் என்பது இன்றுவரை ஒரு புரியாத புதிர். மூடிய டின்னில் இருப்பது என்ன வகையான உணவு என்று சொல்லும் திறமைசாலியான ஜக்ஹெட், ஒரு தேர்ந்த சுவை நிபுணன். இவனது செயல்கள் அனைத்தும் இவனை ஒரு சோம்பேறி போல காட்டினாலும், சந்தர்ப்பங்களில் இவனது மூளை அபாரமாக செயல்படும். இவனது வளர்ப்பு நாயான ஹாட் டாக் ஜக்ஹெட்டைப்போலவே அதிகமாக சாப்பிடும். ஆர்ச்சி காமிக்ஸ் தொடரில் வரும் மற்ற கதாபாத்திரங்களை போலில்லாமல் ஜக்ஹெட் முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தை மறு சீரமைத்துக் கொடுத்தார் டாம். அதன் பின்னர் மறுபடியும் தொடர்ந்து வரையத் துவங்கினார்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் முன்கூட்டியே செயல்படுவாராராம் டாம். அதாவது டிசம்பர் இறுதியில் வெளியாகும் Christmas Special கதைகளை இவர் ஜூன் மாதத்திலேயே வரைந்து விடுவாராம். ஒவ்வொரு மாதமும் ஒரு முழு புத்தகத்திற்கான கதையை வரைந்து கொடுத்து வந்த இவர், 1986இல் தனது முதுமை காரணமாக ஓய்வு பெற்றார்.

IMG-20150723-WA0001

மறைவு: கடந்த வாரம் தொண்டைப்புற்று நோய் இருப்பதை அறிந்த இவர், சிகிச்சைக்கு உட்பட மறுத்து விட்டார். மூன்று நாட்களுக்கு முன்பாக இறைவனடி சேர்ந்தார் டாம்.

அன்னாருக்கு அஞ்சலி.

Wednesday, 1 July 2015

#RIP Leonard Starr அன்னாருக்கு அஞ்சலி


டியர் காமிரேட்ஸ்,

1971-ஆண்டு வெளிவந்த ஹிந்தி திரைப்படம் ஆனந்த். ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கி, ராஜேஷ் கண்ணா நடித்த இத்திரைப்படம் அந்த ஆண்டின் மிகச்சிறந்த இந்திய திரைப்படத்திற்கான நேஷனல் அவார்டை பெற்றது.

மேலும் ஃபில்ம்பேர் விருதுகளை, திரைப்படம், கதை, இயக்கம், நடிப்பு, வசனம், துணை நடிப்பு,பாடல்கள் ஆகியவற்றுக்காக பெற்றது. இந்த திரைப்படத்தின் ஒரு வசனம் இன்றளவும் வாழ்க்கையின் குறிக்கோளை எனக்கு சுட்டிக்காடும் விதமாகவே இருப்பதாக நான் கருதுகிறேன்.

அந்த வசனம்: ஆனந்த்: ”பாபு மோஷாய், ஜிந்தகி படீ ஹோனி சாஹியே, லம்பீ நஹி”. இதனை ஆங்கிலத்தில் Life is Supposed to Be BIG, Not LONG என்று மொழிபெயர்க்கலாம். தமிழில், ”வாழ்க்கை பெரியதாக இருக்க வேண்டும், நீண்டதாக இல்லை” என்று சொல்லலாம்.


 அப்படிப்பட்ட ஒரு பெரிய வாழ்க்கையை வாழ்ந்த ஒரு லெஜெண்ட், ஒரு பெரிய மனிதரின் மரணம் நேற்று நடந்து இருக்கிறது. அவரது பெயர் லியோனார்ட் ஸ்டார் (இதை டைப் அடிக்கும்போது என்னுடைய விரல்களில் ஏற்பட்ட நடுக்கம் இன்னமும் குறையவில்லை).
இவரது வாழ்க்கை வரலாறை இங்கே சென்று படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். இவரைப்பற்றி என்னுடைய எண்ணங்களை, கருத்துகளை மட்டுமே இங்கே பதிவு செய்கிறேன்.

பொதுவாக, ஐரோப்பிய ஓவியர்களுக்கு அமெரிக்காவில் நல்ல மதிப்பு இருக்கும். அவர்களுடைய படைப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட்டு அங்கே வெளியாகும். ஆனால், அமெரிக்க ஓவியர்களின் படைப்புகள் ஐரோப்பாவில் அந்த அளவிற்கு செல்லுபடியாவதில்லை. இதற்கு பல காரணங்கள்.

ஆனால், அமெரிக்க ஓவியரான லியோனார்டோ ஸ்டார் அந்த கட்டுப்பாட்டை தகர்த்து, ஐரோப்பிய காமிக்ஸ் உலகிலும் தன்னுடைய தனித்திறமையை வெளிப்படுத்திய வெகு சில அமெரிக்க காமிக்ஸ் படைப்பாளிகளுல் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரும், (ஹார்ட் ஆஃப் ஜூலியன் ஜோன்ஸ் புகழ்) ஓவியர் ஸ்டான் டிரேக்கும் சேர்ந்து படைத்த கெல்லி க்ரீன் என்ற காம்க்ஸ் தொடர் ஃப்ரென்ச் காமிக்ஸ் இதழான பிலோட்டில் ஆரம்பித்தனர். முதலில் இந்த இதழில் கருப்பு வெள்ளையில் வெளியான இந்த தொடரின் அமோக வெற்றி, பதிப்பாளர்கள் டாரகூவை முழுவண்ண கலெக்டர்ஸ் எடிஷனை வரவழைத்தது. அது மட்டுமல்ல, இத்தொடரை அமெரிக்காவிலும் வெளியிட வைத்தது.

ஒரு ஓவியராக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து, திறமையான கதைசொல்லியாக உருவெடுத்த லியோனர்ட் ஸ்டார், ஓவியத்தின் அனைத்து விஷயங்களையும் அறிந்தவர் என்பதால், இத்தொடரின் ஒவ்வொரு பக்கமும் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகவே அமைத்தது. பிலோட் பத்திரிகை மாற்றங்களுக்கு உள்ளாகி இருந்த காலகட்டத்தில் வெளியானது என்பதால், முழுக்க முழுக்க முதிர்ச்சி அடைந்தவர்களுக்கான கண்டென்ட் தேவைப்பட்டதால், ஓவியங்களிலும், கதையின் ஓட்டத்திலும் சிறிது க்ளாமர் இருந்தது, தேவைப்பட்டது. உதாரணமாக, இந்த ஒரு பக்கத்தைப் பாருங்கள்:


முதல் வரிசையில் இருக்கும் மூன்று படங்களையும் பாருங்கள்: திரைப்பட மொழியில் சொல்வதானால், ஒவ்வொரு பேனலும் (கட்டமும்) ஒவ்வொரு கேமரா ஆங்கிள்.
முதல் பேனல்: Floor Level Shot
இரண்டாவது பேனல்: Eye Level Shot
மூன்றாவது பேனல்: Top Angle Shot

இது போக, நான்காவது மற்றும் ஆறாவது கட்டங்களில் Silhouette Shots, கடைசி இரண்டு கட்டங்களில் Mid Level Shot மற்றும் Close Up Shot (சோகத்தின் பரிணாமத்தை உணர்த்த) என்று அட்டகாசமாக விருந்து படைத்து இருப்பார்கள் இவர்கள். 

இப்படியாக ஒரு ஆல்ரவுண்டராக விளங்கிய லியோனார்டோ ஸ்டார் நேற்று தன்னுடைய இன்னிங்க்ஸை டிக்ளேர் செய்தார்.

பின் குறிப்பு: இந்த அட்டகாசமான தொடரை அமெரிக்காவைச் சேர்ந்த  பிரபல காமிக்ஸ் மறுபதிப்பு நிறுவனமான க்ளாசிக் காமிக்ஸ் ப்ரெஸ் நிறுவனம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட இருக்கிறார்கள். 


அட்டகாசமான இந்த புத்தகப் புதையலில் இதுவரையில் முழு புத்தகமாக அச்சில் வெளிவராத இந்த தொடரின் ஐந்தாம் பாகமும் உள்ளது என்பது தான் Icing on the cake.

புத்தகத்தை Pre ஆர்டர் செய்ய: http://www.classiccomicspress.com/products/kelly-green-the-complete-collection

அன்னாருக்கு அஞ்சலி.