Thursday, 16 April 2015

Dexter Taylor (84) அன்னாருக்கு அஞ்சலி

டியர் காமிரேட்ஸ்,

ஆர்ச்சி காமிக்ஸ் பற்றி நிச்சயமாக கேள்விப்பட்டு இருப்பீர்கள். For those who came in late, தி இந்து நாளிதழின் காமிக்ஸ் ஹீரோக்கள் பகுதியில் இவரைப்பற்றி எழுதி இருக்கிறேன். தேடிப்பிடித்து படிக்கவும்.

அமெரிக்காவின் மனங்கவர் பதின்ம வயதினனான ஆர்ச்சி காமிக்ஸ் தொடரில் பல புதுமைகள் உண்டு. அதில் எனக்கு மிகவும் பிடித்தது லிட்டில் ஆர்ச்சி என்று அழைக்கப்படும் ஆர்ச்சி மற்றும் நண்பர்களின் சிறு வயது சாகசங்களே.

இத்தொடரை பாப் போல்லிங் துவக்கியிருந்தாலும், இதனை சிறப்பித்தவர் டெக்ஸ்டர் டைலர் தான். 1931 ஆம் ஆண்டு பிறந்த இவர், தன்னுடைய 34ஆவது வயதில் லிட்டில் ஆர்ச்சி தொடரை முழுமையாக தன்னுடைய வசப்படுத்தினார்.

Dexter Taylor

இவரது கைவண்ணத்தில் லிட்டில் ஆர்ச்சி மென்மேலும் சிறப்பாக வெளிவரத் துவங்கியது. சமீப காலமாக உடல் நலமில்லாமல் இருந்த டைலர், நேற்று இயற்கை எய்தினார். இவரது கைவண்ணத்தில் வெளியான இரண்டு லிட்டில் ஆர்ச்சி இதழ்கள் நமது பார்வைக்கு:

Dexter Taylor Little Archie 15th Apr 2015

Dexter Taylor Little Archie 15th Apr 2015 2

அன்னாருக்கு அஞ்சலி.

Tuesday, 14 April 2015

Herb Trimpe அன்னாருக்கு அஞ்சலி

டியர் காமிரேட்ஸ்,

சிறுவயதிலிருந்தே திகில் காமிக்ஸ் இதழ்களில் கருப்புக் கிழவியின் கதைகளை படித்து வளர்ந்ததால் பின்னாளில் அதைப்போன்ற கதைகளையே தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன். அப்போது அறிமுகமான ஒரு தொடர்தான் போரிஸ் கார்லோஃப். இந்த புத்தக தொடரும் வழக்கம் போல சிறு கதைகளையே கொண்டது. 4 முதல் 8 பக்கம் வரை கொண்ட திகில் கதைகளின் தொகுப்பாக வெளிவந்துக்கொண்டு இருந்த இதழ் அது.

இந்த தொடரின் ஆரம்ப கால ஒரு கதையில் ஒரு குறிப்பிட்ட கதையும், ஓவியமும் வித்தியாசமாக இருக்க, அப்போதுதான் அறிமுகமானார் ஹெர்ப் ட்ரிம்ப். இவரது பல படைப்புகளை, வரைந்தவர் இவர்தான் என்பது தெரியாமலேயே படித்து இருக்கிறேன். அப்போதெல்லாம் கதையையும், ஓவியத்தையும் தான் கவனிப்போமே தவிர, ஒவியர் யார்? கதாசிரியர் யார்? எடிட்டர் யார்? என்றெல்லாம் பார்த்தது கிடையாது.

நேற்றிரவு இந்த தகவல் வந்தடைந்தது - ஹெர்ப் ட்ரிம்ப் காலமானார். நம்பவே முடியவில்லை. சமீபத்தில் தான் (2008ல்) இவர் ஒரு எட்டு பக்க எக்ஸ் மென் கதையை வரைந்து அழகு சேர்த்திருந்தார்.

Herb Trimbe 13th April 2015

இவர் முதன்முதலில் ஹல்க் கதாபாத்திரத்தை தொடர்ந்து வரைந்து அதை பிரபலமாக்கினார். ஒரு காலகட்டத்தில் ஹல்க் என்றாலே ஹெர்ப் ட்ரிம்ப் தான் நினைவுக்கு வரும் அளவுக்கு இவரது பாணி இருந்தது. பின்னர் பல கதாபாத்திரங்களை வரைந்த இவர், இன்றளவும் நினைவுகூறப்படுவது ஒரு சூப்பர் ஸ்டாரை முதன்முதலில் வரைந்தவர் இவர் என்பதாலேயே.

அக்டோபர் 1974. Hulk தொடரில் The Incredible Hulk என்ற கதை வரிசையில் 180ஆவது இதழின் இறுதியில் ஹல்க் கதாபாத்திரத்துக்கு ஒரு வித்தியாசமான எதிரி தேவைப்பட, கதாசிரியர் லீ வெய்னும், ஓவியர் ஜான் ரோமிடா சீனியரும் சேர்ந்து ஒரு கதாபாத்திரத்தை டிசைன் செய்ய, அதற்கு உயிர் கொடுத்தார் ஹெர்ப் ட்ரிம்ப்.

Herb Trimbe Art 13th April 2015

மார்வெல் காமிக்ஸ் திவாலான உடன் இவர் மறுபடியும் கல்லூரியில் சேர்ந்து, பல வருடங்களுக்கு முன்பாக கைவிட்ட ஓவியப்படிப்பை முடித்து, ஒரு ஓவிய ஆசிரியரானார். இவரது சகோதரன் மைக் ட்ரிம்ப் மற்றும் இவரது மகன் அலெக்ஸ் ட்ரிம்ப் ஆகியோரும் ஓவியர்களே.

அன்னாருக்கு அஞ்சலி.

Tuesday, 7 April 2015

டேனியல் க்ளோஸ் – March 2016 (Fantagraphics)

டியர் காமிரேட்ஸ்,

அமெரிக்காவில் இருக்கும் Fantagraphics Books Inc.​  என்ற இந்த பதிப்பகம் தான் எனக்கு மிகவும் பிடித்தமான பதிப்பகம். இவர்கள் வெளியிடும் அனைத்து புத்தகங்களையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கி விடலாம்.

அனைத்துமே உலகத்தரமான கிராபிஃக் நாவல்கள் மற்றும் அற்புதமான கலெக்டர்ஸ் எடிஷன் புத்தகங்கள். நேற்று இவர்கள் தளத்தில் ஒரு டீசர் வெளியிட்டு இருந்தார்கள். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் (2016 March) வெளியிட இருக்கும் புத்தகத்தின் டீசர் அது.

Fantagraphics

ஒருவழியாக அது யாருடையது என்பதை கண்டறிந்த உடன், மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் அவர் புகழ்பெற்ற படைப்பாளி டேனியல் க்ளோஸ்.

DC 2

ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கும் குழுவினர் முதலில் கேட்பது இந்த கேள்வியைத்தான்: “ டேனியல் க்ளோஸ் தவிர வேறு யாருக்கு விருதுகள் வழங்க இருக்கிறோம்?”. 

ஏனென்றால் ஒவ்வொரு முறை இவரது புத்தகம் வெளியாகும்போதும் அந்த ஆண்டுக்கான ஐஸ்னர், ஹார்வி விருதுகளை இவருக்கு என்று நேர்ந்து விட்டுவிடுவார்கள்.

DC 3DC 1

#ஐயம்_வெயிட்டிங்.

Sunday, 5 April 2015

காமிக் கான் விருதுகள் 2015

டியர் காமிரேட்ஸ்,

சென்ற ஆண்டு தி இந்து பத்திரிக்கைக்காக 2014ன் சிறந்த கிராபிஃக் நாவல்கள் என்று ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தோம். இந்த கட்டுரையில்

  • தமிழில் வெளியான இரண்டு காமிக்ஸ் / கிராபிஃக் நாவல்கள்
  • இந்தியாவில் வெளியான இரண்டு காமிக்ஸ் / கிராபிஃக் நாவல்கள்
  • ஜப்பானிய மாங்கா இரண்டு (2014ல் வெளியானது)
  • அமெரிக்க கிராபிஃக் நாவல்கள் இரண்டு (2014ல் வெளியானது)
  • இங்கிலாந்தில் 2014ல் வெளியான இரண்டு கிராபிஃக் நாவல்கள்

என்று மொத்தம் பத்து புத்தகங்களை தேர்ந்தெடுத்து இருந்தோம். விருதுகள் எதனையும் வழங்கவில்லை என்றாலும், பாரம்பரியம் மிக்க தி இந்து பத்திரிக்கையில் இந்த வரிசை வெளியானதே ஒரு மரியாதை தான்.

கிட்டதட்ட 250 புத்தகங்களுக்கு மேலாக, அலசி ஆராய்ந்து படித்த இந்த புத்தகங்களின் முழுமையான வரிசை இதோ:

The Hindu Tamil Magazine Dated 26th Dec 2014 Ilamai Puthumai Segment Page No 04 Top 10 Graphic Novels of 2014

இன்று, நான்காவது இந்திய காமிக்-கான் விருதுகள் வழங்கும் விழாவில் மேலே நாம் குறிப்பிட்டுள்ள World War 1 என்ற புத்தகமே சிறப்பாக எழுதப்பட்ட கிராபிஃக் நாவல் விருதை வென்றுள்ளது என்று இதன் கதாசிரியரும், நண்பருமான ஆலன் கௌசில் தெரிவித்தார்.

Comic Con Awards Best Writer World War 1

 

இங்கிலாந்தை சேர்ந்த பழகுவதற்க்கு இனிமையான நண்பரான ஆலனுக்கும், ஓவியர் லலித் குமாருக்கும், பதிப்பாளர்கள் கேம்ப் ஃபையருக்கும் தமிழ் காமிக்ஸ் உலகம் சார்பில் நமது வாழ்த்துகள்.

Comic Con Awards Best Writer World War 2

Wednesday, 1 April 2015

வரையறைகளை அத்துமீறும் கலகக் காரன் – ஏப்ரல் தீராநதி கட்டுரை

டியர் காமிரேட்ஸ்,

இந்த ஏப்ரல் மாத குமுதம் தீராநதியின் அட்டைப்பட கட்டுரையாக நம்முடைய “வரையரைகளை அத்துமீறும் கலகக்காரன்” என்ற முயற்சி வெளியாகி உள்ளது. என்னை பொருத்த அளவில், சமகால கிராபிஃக் நாவல் வாசிப்புக்கு இந்த கட்டுரை ஒரு முக்கியமான முயற்சியாக அமையும் என்றே நினைக்கிறேன்.

இந்த வார குமுதம் இதழில் வெளியாகி இருக்கும் தீராநதி இதழின் விளம்பரம்:

Kumudam TheeraNathi April 2015 Advertisement in Kumudam Weekly Dated 06042015 on stand 30032015 Page No 123

யார் இந்த கலகக்காரன்: ஒருவரிடமிருந்து பாரட்டு பெறுவது மிகவும் கடினமாக இருக்கும் தற்போதைய சூழலில், ஒரே துறையை சேர்ந்த (போட்டியாளர்களால்) கொண்டாடப்படுவதுதான் ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் உட்சபட்ச மரியாதை.

உதாரணமாக ஒரு ரசிகனாக, சச்சின் தெண்டுல்கரை நம்மால் பாராட்ட முடியும். ஆனால் அதே துறையில் உச்சத்தில் இருந்த சமகால விளையாட்டு வீரர்களும், போட்டியாளர்களும் பாராட்டினால் அந்த பாராட்டின் மதிப்பே தனி.  பிரையன் லாராவும், ஷேன் வார்னேவும் சச்சினை பாராட்டும்போதுதான் அவருடைய மதிப்பு உயர்கிறது. ஏனென்றால் இது அந்த கலையை முழுமையாக உணர்ந்தவர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டு.

இப்படி, சமகால கிராபிஃக் நாவல் உலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ஒருவரால் “உலகிலேயே மிகச்சிறந்த காமிக்ஸ் கதை” என்று கொண்டாடப்படடும் ஒரு கதையின் படைப்பாளிதான் இந்த கட்டுரையின் நாயகன்.

ஒரு படைப்பாளியையும், அவரது படைப்புகளையும் தனியாக பிரித்து பார்க்கச் சொல்வதே சிறப்பான வாசிப்புக்கு உகந்தது. ஆனால் வரையரைகளை அத்துமீறுவதையே வ்ழக்கமாக கொண்ட இந்த கலகக்காரனுக்கு இந்த வாசிப்பு முறை சரிப்பட்டு வராது.

இவரது படைப்புகளை சரியாக ரசிக்க வேண்டுமெனில் இவரைப்பற்றியும், இவரது இயக்கத்தை பற்றியும் ஓரளவுக்காவது தெரிந்திருத்தல் அவசியம்.

  • யார் அந்த சமகால கிராபிஃக் நாவல் உலகின் சூப்பர் ஸ்டார்?
  • அவரால் பாரட்டப்பட்ட அந்த “உலகிலேயே மிகச்சிறந்த காமிக்ஸ் கதை” எது?
  • அந்த கதையின் படைப்பாளி –கலகக்காரன் – யார்?
  • ஏன் அவருடைய படைப்புகளையும், அவரையும் ஒருங்கே அவதானிக்க வேண்டும்?
  • பேயோன் என்பது யார்? அவருக்கும் இந்த கலகக்காரனுக்கும் என்ன சம்பந்தம்?

இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த கட்டுரை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படியாக ஒரு அருமையான வாசிப்பு அனுபவத்தை பெற, உடனடியாக இந்த மாத குமுதம் தீராநதி இதழை வாங்கி பயன்பெறவும்.

தனிப்பிரதி: விலை ரூபாய் 20/-

ஆண்டு சந்தா: விலை ரூபாய் 300/-

ஆண்டு சந்தா (அயல்நாடு): ரூபாய் 800/- அல்லது 20 டாலர்.

சந்தா தொகையை DD / MO மூலம் Kumudam Publications pvt Ltd என்று எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்:

குமுதம் பப்ளிகேஷன்ஸ் பி லிமிடெட்,

பழைய எண் 151, புதிய எண் 306,

புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10.

தொடர்புக்கு: 044-264 22 148

என்சாய்.