டியர் காமிரேட்ஸ்,
இந்த மார்ச் மாத குமுதம் தீராநதியின் அட்டைப்பட கட்டுரையாக நம்முடைய “தமிழின் முதல் கிராபிஃக் நாவல்” என்ற முயற்சி வெளியாகி உள்ளது. சமகால சித்திரக்கதை வாசிப்பு அனுபவத்திற்கு இந்த கட்டுரை மிகவும் முக்கியமான ஒன்றாக அமையும் என்று கருதுகிறேன்.
இந்த கட்டுரையில்…..
-
சித்திரக்கதை (காமிக்ஸ்) மரபு உருவான வரலாறு
-
உலகின் முதல் சித்திரக்கதை (காமிக்ஸ்)
-
சித்திரக்கதைகளின் அமைப்பு
-
சித்திரக்கதைகளின் பரிணாம வளர்சி
-
சித்திரக்கதைகளுக்கும் (காமிக்ஸ்) கிராபிஃக் நாவலுக்கும் உள்ள வித்தியாசம்
-
உலகின் முதல் கிராபிஃக் நாவல்
-
தமிழில் இதுவரை வெளிவந்துள்ள கிராபிஃக் நாவல்கள்
-
தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட கிராபிஃக் நாவல்களின் விமர்சனம்
-
இந்தியாவில் தற்போது உருவாகிவரும் கிராபிஃக் நாவல்களின் அறிமுகம்
-
சிறந்த இந்திய கிராபிஃக் நாவல் படைப்பாளிகள்
என்று பல உள்ளடக்கங்களை கொண்ட ஒரு கட்டுரையாக உருவெடுத்துள்ளது. இதன் தொடர்ச்சி அடுத்த இதழில் வெளிவரும்.
கட்டுரையின் ஒரு பகுதி:
சித்திரக்கதைகளுக்கென்று ஒரு தனி வரையறை உண்டு. அவற்றை இங்கே காண்போம்.
ஒவ்வொரு காமிக்ஸ் கதையும் பேனல்கள் என்று அழைக்கப்படும் கட்டங்களால் உருவாக்கப்பட்டது. இந்த கட்டங்கள், பெரும்பாலும், எல்லைக்கோடுகளால் பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த பேனல்கள் தொடர்ச்சியான செயலின் ஒரு அங்கமாகும்.
ஒரு கதையை முக்கியமான சிறு சிறு பகுதிகளாக பிரித்து, அந்த சிறு பகுதிகளை ஓவியங்களால் விளக்கி, வார்த்தைகளால் அலங்கரித்து உருவாக்கப்பட்டதே ஒவ்வொரு பேனலும்.
இந்த கட்டங்களை ஒன்று சேர்த்து படிக்கும்போது அவை தொடர்ச்சியாக ஒரு கதையின் இயக்கத்தை விவரிக்கின்றன. இதற்க்காக இரண்டு விதமான கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன:
Caption என்று அழைக்கப்படும் கதையின் இயக்கத்தை விவரிக்கும் வகையில் மூன்றாம் நபரின் பார்வையில் கதாசிரியரால் எழுதப்பட்டு இருக்கும்.
Speech Balloon என்றழைக்கப்படும் வளிக்கூண்டுகள். இவை உரிய கதாபாத்திரங்களின் உரையாடலை விவரிக்கும். இந்த பலூன்களின் முனை யாரை நோக்கி இருக்கிறதோ, அவரது கருத்தாக புரிந்துக்கொள்ளப்பட வேண்டும். இந்த பலூன்களில் மொத்தம் நான்கு வகை உண்டு.
-
கதாபாத்திரம் வழக்கம் போல, நடைமுறையாக பேசுவது
-
இரகசியமாக, மெலிதான குரலில் பேசுவது
-
எண்ணங்களாக மனதில் நினைப்பது
-
உரக்க பேசுவது / கத்துவது – அலறுவது
இதிலேயே கூட சில வரையரைகள் உண்டு. ஒன்று கதாபாத்திரங்கள் பேசாமல், மூன்றாவது நபர் விவரிப்பின் மூலமாக கதையை சொல்வது. இரண்டாவது முறையில் கதாபாத்திரங்கள் பேச உதவியாக வார்த்தை வளிக்கூண்டுகள் (பேச்சு பலூன்கள்) உருவாக்கப்பட்டு, கதைமாந்தர்கள் பேசுவதைக்கொண்டு கதையை இன்னமும் விளக்கமாக நடைமுறை பாணியில் சொல்வது.
இப்படியாக ஒரு அருமையான வாசிப்பு அனுபவத்தை பெற, உடனடியாக இந்த மாத குமுதம் தீராநதி இதழை வாங்கி பயன்பெறவும்.
தனிப்பிரதி: விலை ரூபாய் 20/-
ஆண்டு சந்தா: விலை ரூபாய் 300/-
ஆண்டு சந்தா (அயல்நாடு): ரூபாய் 800/- அல்லது 20 டாலர்.
சந்தா தொகையை DD / MO மூலம் Kumudam Publications pvt Ltd என்று எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்:
குமுதம் பப்ளிகேஷன்ஸ் பி லிமிடெட்,
பழைய எண் 151, புதிய எண் 306,
புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10.
தொடர்புக்கு: 044-264 22 148
கட்டுரையை முடிக்கும் முன்பாக ஒரு சுவையான செய்தி: சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பிரபல வார இதழில் தமிழின் முதல் சித்திரக்கதையை அவர்கள் தான் வெளியிட்டதாக கூறி, ஒரு குறிப்பிட்ட இதழில் வெளியான கதையை பற்றி வெளியிட்டு இருந்தார்கள்.
ஆனால், அதற்க்கு முன்பாகவே தமிழில் பிரபல வெகுஜன பத்திரிக்கையில் காமிக்ஸ் கதையும், கிராபிஃக் நாவலும் வெளியிடப்பட்டதை இந்த கட்டுரையில் காணலாம்.
என்சாய்.