காமிரேட்ஸ்,
சென்ற ஆண்டாகிய 2013 நம்முடைய காமிக்ஸ் வாழ்வில் ஒரு மறக்க முடியாத ஆண்டாக மாறியுள்ளதை நாம் அனைவருமே அறிவோம். 24 புத்தகங்கள், ஒரு மிகப்பெரிய ஸ்பெஷல் வெளியீடு, ஒரு டெக்ஸ் வில்லர் ஸ்பெஷல் என்று எடிட்டர் வீடு கட்டி விளையாடிய ஆண்டு இந்த 2013. அதனைப்பற்றைய ஒரு முழுமையான விமர்சனத்தை முன்வைப்பதற்க்கு முன்பாக எடிட்டர் நம்மிடம் கேட்ட கேள்விகளுக்கு இந்த பதிவில் பதில் சொல்லிவிடலாமே?
உண்மையை சொல்வதெனின் எடிட்டரின் இந்த பதிவை படித்த பின்புதான் இதற்க்கான பதில்களை டைப் செய்து வைத்துவிட்டு அவற்றை அனுப்பாமலே விட்டது நினைவுக்கு வந்தது. ஆகையால் கேள்விகளும், அதற்க்கான என்னுடைய பதில்களும் இங்கே:
(1) 2013ன் டாப் 3 இதழ்கள்;
1. ஆல் நியூ ஸ்பெஷல் (பல வருடங்களாக தொடர்ந்து சென்றுக்கொண்டு இருந்த பாதையில் இருந்து விலகி பயணிக்க முடிவெடுத்த அந்த ஒரு காரணம் மட்டுமே அந்த இதழை பிடிக்க தலையாய காரணீ)
2. லக்கி ஸ்பெஷல் (பழைய நண்பனை மீண்டும் கண்ட சந்தோஷம்)
3. நெவர் பிஃபோர் ஸ்பெஷல் - தீபாவளி ஸ்பெஷல் டெக்ஸ் வில்லர்
(இரண்டுமே சம அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன. ஆல் நியூ ஸ்பெஷலில் கல்யாண வீட்டில் சந்திக்கும் விருந்தினர்களைப்போல எல்லா ஹீரொக்களையுமே ஒரே இடத்தில் பார்த்த சந்தொஷம். டெக்ஸ் வில்லரின் தீபாவளி ஸ்பெஷலைப் பொருத்தவரையில் இருவது ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு குண்டு ஸ்பெஷல் இதழை கையில் எடுத்தால் என்ன திருப்தி தருமோ அந்த சந்தோஷம் கிடைத்தது. உண்மையை சொல்வதெனின் இந்த இதழை படித்த நேரத்தைவிட கையில் வைத்து ரசித்த நேரமே அதிகம்).
(2) 2013ன் சொதப்பல் எது?
அழகான குழந்தைகளுள் சொதப்பல் எது? என்பது போன்ற கேள்வி இது. பூந்தோட்டத்தில் மோசமான மலர் எது? என்று சொல்ல முடியுமா என்ன? அதுபோலத்தான்.
இருந்தாலும் தர வரிசை பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தவை என்று பட்டியலிட முடியுமே தவிர, சொதப்பல் என்றல்ல. அப்படியாக தர வரிசை பட்டியலில் கடைசியாக வந்தவை இவையே:
வேங்கையின் சீற்றம்
பூத வேட்டை
சிகப்பாய் ஒரு சொப்பனம் (இந்த Tex கதைகள் ஒரு குறிப்பிட்ட பக்கங்களுக்கு பிறகு அலுப்பையே தந்தன, அதனாலேயே இந்த முடிவு.
(3) 2013ன் சிறந்த அட்டைப்படங்கள் யாவை?
1. டைகர் ஸ்பெஷல் (விளக்கம் வேண்டுமா என்ன?)
2. டெக்ஸ் வில்லர் தீபாவளி ஸ்பெஷல் (ஒரு நாஸ்டால்ஜியா எஃபெக்ட்)
3. இரத்தப்படலம் (இந்த அட்டை பிடிக்க கதையும் ஒரு காரணம்)
(4) 2013னில் இன்னும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வந்திருக்க வேண்டிய அட்டைப்படங்கள்;
1. ஆதலினால் அதகளம் செய்வீர் (வண்ணக்கலவை செய்த குளறுபடி)
2. ஒரு சிப்பாயின் சுவடுகளில்… (லோ ரெஷல்யூஷன் படங்கள்).
3. நெவர் பிஃபோர் ஸ்பெஷல் – இந்த சாதனை மலரில் இன்னமும் ஏதோ குறையுது)
(5) 2013ன் டாப் நாயகர்(கள்) யார்?
1. லார்கோ வின்ச் (விளக்கம் வேண்டுமா என்ன?)
2. வேய்ன் ஷெல்டன் (விளக்கம் வேண்டுமா என்ன?)
3. XIII (விளக்கம் வேண்டுமா என்ன?)
(6) விரும்பதாகாத கதை வரிசைகள் ஏதேனும்….?
குறை என்று சொல்லவில்லை எனினும் ஒரே பாணியிலான டெக்ஸ் கதைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோமோ? என்ற எண்ணம் சமீப காலமாக மேலோங்கி வருகிறது.
அதைப்போலவே டையபாலிக் கதைகளிலுமே கூட திரைக்கதை மிகவும் துல்லியமாக அமைக்கப்பட்டு இருக்கும் சுமாரான படம், ஹிட் ஆவதைப்போல இந்த தொடரும் திரைக்கதை மசாலா அம்சங்களுடன் மிகச்சரியான கோர்வையில் அமைந்து இருந்தாலுமேகூட மிகவும் சாதாரண கதைகள் தான் இவை என்று ஒவ்வொரு கதையின் முடிவிலும் தோன்றுகிறது.
அதைபோலவே கேப்டன் ப்ரின்ஸின் கதைகளின் முடிவு திடீரென்று வருவதை 25 ஆண்டுகளாக பொறுத்துக்கொண்டு வருகிறோம். மிகவும் நிதானமாக ஆரம்பிக்கும் அவரது கதைகள், ஒரு அசாதாரண வேகத்துடன் பயணிக்கும். முடிவோ சொல்லி வைத்தது போல, சட்டென்று வந்துவிடும்.
(7) கருப்பு வெள்ளை இதழ்கள் பற்றி…?
கண்டிப்பாக தேவை.
அதே சமயம், வண்ண இதழ்களுக்கும் கருப்பு வெள்ளை இதழ்களுக்கும் தயாரிப்பு செலவு கிட்டதட்ட ஒரே அளவுதான் என்ற இப்போதைய சந்தை நிலவரம் தான் நடைமுறை சிக்கல்களை உருவாக்குகிறது. அடுத்த ஆண்டாவாது (2015) இந்த நிலைமை மாறினால்…. அப்போது சி.ஐ.டி. ராபின், மர்ம மனிதன் மார்ட்டின், டேஞ்சர் டையபாலிக் போன்ற நாயகர்களுக்கு தொடர் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். அடுத்த ஆண்டில் கருப்பு வெள்ளை இதழ்கள் சாத்தியம் எனில் ஒரு புதிய வரிசையை துவக்குவதில் தவறே கிடையாது.
(8) 2014ன் கதை தேர்வுகள் பற்றி…….?
சில குறிப்பிட்ட கருப்பு வெள்ளை கதா நாயகர்கள் மிஸ் ஆகிறார்கள். உதாரணமாக மாடஸ்டியின் கதை வரிசையில் மிகச்சிறந்த கதைகள் பலவும் உண்டு. உதாரணமாக மாட்ஸ்டியின் உதவியாளர் வெங் பற்றிய கதை, டார்ரண்டின் உதவியாளர் சினம் கொண்டு வஞசம் தீர்க்க செல்லும் கதை என்று பல. அவற்றில் சிலவற்றை வெளியிடலாமே?
அதைப்போலவே தான் ரிப் கிர்பி + பில் காரிகன் கதைகள். இன்னமும் வெளியிடப்படாத கதைகள் இந்த வரிசைகளில் பலவும் உண்டு. ஆகையால்……..Judgment is Reserved Till We Read Those stories.
(9) 2013ல் டெக்ஸ் கதைகள் ஒவர்டோஸா?
மூன்று வேளை சாப்பிடுவது ஒவர்டோஸா? என்று கேட்பது பொலிருக்கிறது இந்த கேள்வி.
கண்டிப்பாக இல்லை,
இப்போது மட்டுமல்ல,
எப்போதுமே.
(10) இரத்தப்படலம் – புதிய அத்யாயம் எப்படி?
ஒரே ஒரு வார்த்தை – சிறப்பு.
இரண்டு வார்த்தைகளில் சொல்வதெனின் மிகவும் சிறப்பு.
(11) நம்மிடம் இருக்கும் கதை வரிசைகளை தவிர ரசிக்க விரும்பும் புதிய கதை வரிசைகள்?
1. சைன்ஸ் பிஃக்ஷன்.
2. ஃக்ராபிக் நாவல்கள்
3. திகில் கதைகள்.
(12) 2013 நிறை குறைகள்…..
நிறைகள்;
- எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்த கதைவரிசைகள்
- தாமதப் பேயை விரட்டியது
- மாதம் முதல் வாரத்திலேயே புத்தகங்களை கொண்டு வந்தது
குறைகள்;
- திடீர், திடீரென்று கதைகளை, வரவேண்டிய வரிசைகளை மாற்றியது
- வருகிறது என்று விளம்பரப்படுத்தி விட்டு பின்னர் அவற்றை வெளியிடாமல் விட்டுவிட்டது (ஆல் நியூ ஸ்பெஷல் முதலில் விளம்பரப்படுத்தப்பட்ட கதைகள், டைஜெஸ்டுகள் இதர, இதர)
- பிரதான நாயகர்களின் சுமாரான கதைகளை வெளியிடுவது (உதாரணம் லக்கிலூக், மாடஸ்டி)
விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம் காமிரேட்ஸ்.
தங்களின் முதல் பதிவில் முதல் கமெண்ட் என்னுடையாதாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் :)
ReplyDeleteஇதை நான் எதிர்பார்த்தேன் நண்பரே. :)
Deleteநீங்கள் இப்படி கூறுவீர்கள் என்று நான் நிச்சயமாக எதிர்பாக்கவில்லை :)
Deleteஆனால் நீங்கள் இப்படி கூறுவீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன் நண்பரே
Deleteநீங்கள் இப்படி கூறுவது எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை அளிப்பதாக இருக்கிறது :)
Deleteஆனால் எனக்கு ஆச்சர்யமே இல்லை :)
DeleteThhodarnthu eluthungal anna
ReplyDeleteநிச்சயமாக தம்பி.
Deleteபுதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே !!!!
ReplyDeleteநன்றி தோழர் ப்ளூபெர்ரி
Deleteதங்களது சித்திரக் கதை சேவைக்கு இனிய வாழ்த்துகள்...
ReplyDeleteவருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி கனகராஜன் சார்
Deleteசற்றே தாமதமான பதிவென்றாலும், நிறையவே ரசிக்க வைக்கிறது.
ReplyDeleteபலருக்கும் (நான் உட்பட) அட்டகாசமான, விறுவிறுப்பான கதையாகத் தோன்றிய 'சிகப்பாய் ஒரு சொப்பனம்' உங்களுக்கு மட்டும் போரடித்தது ஏனென்று புரியவில்லை!!
சிகப்பாய் ஒரு சொப்பனம் தனி கதையாக எனக்கு ஓக்கேதான் தோழர்.
Deleteஆனால் இந்த வருடம் அந்த கதையை தொடர்ந்த அடுத்த டெக்ஸ் கதையிலும் கொஞ்சம் இழுவை இருந்ததாக எனக்கு பட்டது. கிட்டத்தட்ட முடிவு இதுதான் என்பதை ஆரம்ப பக்கங்களிலேயே சுலபமாக ஊகிக்க முடிந்த கதைகள் இந்த இரண்டுமே. ஆகையால்தான் இப்படி ஒரு கமெண்ட்.
சரி, அடுத்த மாதம் நேரில் சந்திக்கும்போது இதைப்பற்றி அலசுவோமே?
True one.....superb post.
ReplyDeleteநன்றி அஹ்மத் பாஷா சார்.
Deleteதொடர்ந்து ஆதரவு அளிக்கும் உங்களைப் போன்ற காமிரேட்களால் தான் என்னை போன்றவர்கள் இயங்கவே முடிகிறது.
உங்கள் 2013/ம் ஆண்டு விமர்சனம் மிகவும் அற்புதம். இவ்வளவு தெளிவாக வேறு யாரும் இதை செய்திருக்க முடியாது என்பது என் எண்ணம். மாடஸ்தி பற்றிய உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.
ReplyDeleteநன்றி முகுந்தன் சார்.
Deleteமாடஸ்டி கதை வரிசையில் இன்னமும் சில அருமையான கதைகள் இருக்கின்றன. எடிட்டர் மனது வைத்தால் செய்யலாம்.
பார்ப்போம்.
வருகைக்கும், ஆதரவான வார்த்தைகளுக்கும் நன்றி சார்.
Present
ReplyDeleteஇவ்வளவு பெரிய கமெண்ட் போட்டால் எப்படி தோழர்?
Deleteஎனக்கு இதனை படிக்கவே ஒரு மாமாங்கம் ஆகும் போலிருக்கே?
வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!
ReplyDeleteநன்றி கார்த்திகேயன் சார்.
Deleteநீங்களும் உங்கள் வலைபதிவில் ஏதேனும் அப்டேட் செய்தால் நலம்.
காத்திருக்கிறோம்
இங்கேயாவது மாதம் ஒரு பதிவாவது அரங்கேறுமா இல்லை ........
ReplyDeleteசகா,
ReplyDeleteஉண்மையிலேயே இந்த வெள்ளை நிற பேக் கிரவுண்டில் உங்கள் பதிவுகளை தமிழில் படிக்க அருமையாக இருக்கிறது.
முடிந்தால் உங்கள் ஆங்கில தளத்தையும் இந்த பேக் கிரவுண்ட்க்கு மாற்றிவிடுங்களேன்?
உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது தமிழில் தொடர்ந்து வெளியிடுங்கள்..
ReplyDeletegood start viswa.
ReplyDeleteவிஸ்வா திருச்சிக்கு எப்ப வரீங்க . திருச்சி புத்தக கண்காட்சி எங்கே என்ற விபரம் கிடைக்குமா? திருச்சியில் இருந்துகிட்டு உங்களை கேக்குறேன்னு என்னை பாராட்டதீங்க .
ReplyDeleteநல்ல பதில்கள். ஆனால் பூத வேட்டையும் சிகப்பாய் ஒரு சொப்பனமும் சுமார் கதைகள் என்பதைத்தான் தாங்கமுடியவில்லை! சென்ற ஆண்டின் அட்டைப்படங்களில் மிகவும் அருமையாக வெளிவந்தது ரிபோர்ட்டர் ஜானி ஸ்பெஷல் என்பதே என் கருத்து, சார்!
ReplyDeleteதமிழில் வந்ததற்கு ஆயிரம் கோடி நன்றிகள் சார் ..
ReplyDeleteஅருமையான விமர்சனம் ....
ஆனால் சொதப்பல் இதழ்களில் இரண்டை எங்கள் டெக்ஸ் வில்லர் இதழ்களை தாங்கள் அறிவித்ததில் எங்கள் போராட்ட குழு கடும் கண்டனத்தை அறிவிக்கறது .
உங்கள் இந்த " தமிழ் காமிக்ஸ் உலகத்தை " தங்களின் ஆங்கில காமிக்ஸ் உலகத்தில் உள்ள பிற பதிவர்களின் அறிமுகத்தோடு இணைக்க வேண்டுகிறேன் சார் .நன்றி .
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் பதிவிட்டதற்கு வாழ்த்துகள்! இனி மேலாவது digest கள் வெளிவரட்டும் comicsகளில்
ReplyDelete