டியர் காமிரேட்ஸ்,
இன்று மதியம், சுமார் 3 மணி இருக்கும். மதிய உணவை சற்று தாமதமாக உண்டதால் சற்றே கண்ணயரலாம்(மா?) என்று யோசித்து கொண்டு இருந்தபோது மவுண்ட் ரோடில் இருக்கும் ஒரு மீடியா நிறுவன நண்பர் தொலைபேசியில் அழைத்தார். இவரிடமிருந்து சுலபத்தில் அழைப்பு வராதே? என்னவாக இருக்கும்? என்று யோசித்துகொண்டே அழைப்பை ஏற்றேன்.
நண்பர் சொன்ன தகவல் நம்பமுடியாத தகவல் அல்லதான் என்றாலும், சற்றே ஆச்சரியமூட்டும் ஒன்றுதான்.
சென்னையில் மவுண்ட் ரோடில் தேவி திரையரங்கம் (தமிழில் சொல்லவேண்டுமென்றால், தேவி தியேட்டர்) வாசலில் இருக்கும் பழைய புத்தக கடையில் 4 தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை பார்த்தாராம். உடனே வர சொன்னார். அவருக்கும் காமிக்ஸ் வாசிப்புக்கும் சம்பந்தம் துளியும் கிடையாதென்பதால் அவரே அந்த புத்தகங்களை வாங்காமல் என்னை வர சொன்னார்.
அவரிடம் என்ன புத்தகங்கள்? பெயர் என்ன? என்ன ப்ராண்ட்? என்றெல்லாம் கேட்டால் போனிலேயே அடிப்பார் என்பதால் உடனே என்னுடைய அலுவலக ஒட்டுனரை வரச்செய்து அங்கே சென்றேன். அங்கே நான் வாங்கிய புத்தகங்கள் இவைதான்: (இந்த போட்டோக்கள் இன்றுதான் எடுக்கப்பட்டவை என்பதற்க்கு ஆதாரமாக அவை இன்றைய மாலை முரசு நாளிதழுடன் இணைத்து படம் பிடிக்கப்பட்டுள்ளன).
இந்த புத்தகங்களை நான் என்ன விலை கொடுத்து வாங்கினேன் என்று யூகிக்க முடியுமா? நான்கு ராணி காமிக்ஸ் புத்தகங்களுமே மின்ட் கண்டிஷன் என்று சொல்லப்படும் நிலையில் அட்டகாசமான தரத்தில் பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளன. இந்த புத்தகங்கள் வெளிவந்த ஆண்டு மற்றும் புத்தக விவரங்கள் பின்வருமாறு:
1. மந்திரியை கடத்திய மாணவி - (வெளியீடு எண் 3) – ஆகஸ்டு 1984 – 007 ஜேம்ஸ் பாண்ட் சாகசம்
2. ரத்தக் காட்டேரி - (வெளியீடு எண் 23) – ஜூன் 1985 – 007 ஜேம்ஸ் பாண்ட் சாகசம்
3. மரக் கோட்டை - (வெளியீடு எண் 30) – செப்டம்பர் 1985 – கிட் கார்சன் சாகசம்
4. மரண பயனம் - (வெளியீடு எண் 64) – செப்டம்பர் 1987 – சூப்பர் ஹீரோ டைகர் தூள் பரத்தும் சாகசம்
இந்த புத்தகங்களை நான் 20 ருபாய்க்கு தான் வாங்கினேன் (அதாவது ஒரு புத்தகத்திற்க்கு நான் கொடுத்த விலை 5 ருபாய் தான்). கொஞ்சம் அதிகம்தான், இருந்தாலும் பரவாயில்லை. நண்பர்களே, நீங்களும் சமீபத்தில் இது போல வாங்கிய புத்த்தகங்களை பட்டியலிடலாமே? அதனால் நாம் வாங்கும் புத்தகங்களின் விலை நம் அனைவருக்குமே தெரிய வருவதுடன் மற்றவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
வாழ்த்துக்கள்
ReplyDeletewell said at the last!
ReplyDeleteஆதாரம் அற்புதம் ; அருமையான அழிக்க முடியாத ஆவணம் !
ReplyDeleteபுத்தகங்களின் மின்ட் கண்டிஷன் எனக்கு சோகத்தை தருகிறது ;
அதற்கு நீங்கள் கொடுத்த விலையோ [5] எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது :)
மகிழ்ச்சி சார் ....
ReplyDeleteஇந்த சேலத்து வியாபாரிகளுக்கு மட்டும் காமிக்ஸ் என்பது தங்கம் என்று என்று யார் சொன்னார்களோ ?
ஐயோ சார்,
ReplyDeleteஇப்பதான் உங்க தளத்துக்கு வர்றேன்.
இந்தப் புத்தகம் எல்லாம் நான் படிச்சது,
நந்தினி 440 வோட்ஸ் படிச்சிருக்கேன். ஆனா அது முதல் நாவல்னு தெரியாது.
அப்பறம் லயன் முத்து காமிக்ஸ் ஒரே பப்ளிஷரோடதா?
என்னக் குழந்தையாவே ஆக்கிட்டிங்க!
ரொம்பநன்றி சார்!