டியர் காமிரேட்ஸ்,
கடந்த ஒரு வாரமாக ஒரு சூறாவளி சுற்றுப்பயணத்தில் இருப்பதால் என்னால் இந்த பதிவினை உடனடியாக வலையேற்ற முடியவில்லை. அதற்க்காக மன்னிக்கவும். இந்த பதிவானது கடந்த செவ்வாய்கிழமை அன்று கோவையில் நான் வாங்கிய இரண்டு மிக முக்கியமான புத்தகங்களை பற்றியது.
பாக்கெட் நாவல் என்ற ஒரு மாத இதழ் மூலம் வெற்றிகனியை சுவைத்த திரு ஜி.அசோகன் அவர்களால் 1986ல் ஆரம்பிக்கப்பட்ட க்ரைம் நாவல் பற்றி உங்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கும். அந்த க்ரைம் நாவலின் முதல் இதழ் எவ்வளவு அரிய ஒன்று என்பதை பற்றி திரு R.T. முருகன் அவர்களிடம் விசாரித்து பாருங்கள் தெரியும். இவ்வளவு ஏன்? திரு அசோகன் அவர்களிடமே இப்போது இந்த முதல் இதழ் 2 காப்பி இருக்கிறதா என்றால், பதில் இல்லை என்பதே.
அப்படிப்பட்ட இந்த முக்கியமான இதழை நான் கோவையில் மணிக்கூண்டின் அருகில் இருக்கும் பழைய புத்தக சந்தையில் வெறும் 10 ருபாய்க்கு வாங்கினேன். அதாவது 2 புத்தகங்களும் சேர்த்து 10 ருபாய்.
சோகக்கதைகளை சொல்லி சில மாபாதகர்கள் காமிக்ஸ் புத்தகங்களைத்தான் கண்டபடி விலையேற்றி வைத்து இருக்கிறார்கள் என்றால், இந்த மாதிரியான பழைய மாத நாவல்களையும் விட்டு வைக்கவில்லை. இப்போது கூட இந்த மாதிரியான நாவல்களின் விலையை 50 ருபாய் முதல் 500 ருபாய் வரை விற்க சிலர் முயன்று வருகிறார்கள். அவர்களுக்கு இந்த விலை ஒரு சவுக்கடியாக இருக்க வேண்டுமென்றேதான் நான் இந்த புத்தகங்களையும், அவற்றின் விலையையும் இங்கே வெளியிட்டுள்ளேன்.
இந்த புத்தகங்கள் இங்கே கோவையில்தான் வாங்கப்பட்டவை என்பதை உறுதி செய்யவே கோவை பதிப்பு தினத்தந்தி நாளிதழின் முன்னே அவை வைக்கப்பட்டு போட்டோ எடுக்கப்பட்டுள்ளன. நண்பர்களே, நீங்களும் சமீபத்தில் இது போல வாங்கிய புத்த்தகங்களை பட்டியலிடலாமே? அதனால் நாம் வாங்கும் புத்தகங்களின் விலை நம் அனைவருக்குமே தெரிய வருவதுடன் மற்றவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
உண்மையிலேயே மிக அரிதான புத்தகம் இது. தமிழ் பத்திரிக்கை உலகில் காமிக்ஸ் எப்படி ஒரு சகாப்தமாக விளங்கியதோ அதே அளவுக்கு கோலோச்சியவை பாக்கெட் நாவல்கள். இந்த polar, crime வகை நாவல்கள் தமிழில் செழித்தோங்குவதற்கு மிக முக்கியமான காரணகர்த்தா ஜி. அசோகன் என்றால் அது மிகையாகாது.
ReplyDeleteபல வார, மாத நாவல்களை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் " க்ரைம் நாவலை " எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்காக மட்டுமே ஆரம்பித்தார் அசோகன். ராஜேஷ்குமாரின் விவேக், ரூபலா கதாபாத்திரங்கள் பெரும்புகழ் பெற்றதற்கு அசோகன் போட்டுதந்த " ராஜபாட்டை " மிக முக்கியமான ஒன்று.
FROM MURUGAN,
ReplyDeleteCongrats for getting these very rare books.HAPPY BIRTHDAY KING.