டியர் காமிரேட்ஸ்,
வியாபார நிமித்தமாக ஊர் ஊராக அலைந்து திரிந்த ஒருவர் காமிக்ஸ் பதிப்பகம் ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்து நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து ஆரம்பிக்கிறார். அவர் செய்த வேலை என்ன தெரியுமா? தன்னுடைய பயணத்தில் தான் சந்தித்த நபர்களை எல்லாம் கதாபாத்திரங்களாக கொண்டு ஒரு தொடரை ஆரம்பித்தது தான்.
இந்த தொடருக்கு ஓவியராக வந்தவரும் லேசுப்பட்டவர் இல்லை. இவரும் தன் பங்கிற்க்கு தனது முன்னாள் நண்பி, தான் வரைந்த ஆட்கள் என்று அவரும் நிஜ வாழ்க்கையில் சந்தித்த நபர்களை எல்லாம் கதாபாத்திரமாக மாற்ற, ஒரு புதிய காமிக்ஸ் தொடர் ஆரம்பம் ஆனது. அப்படி அன்றாட வாழ்வில் நாம் பார்த்திருக்ககூடிய நபர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தொடர் நிச்சயமாக மக்களை கவர்ந்திருக்க வேண்டுமல்லவா?
உலகம் எங்கும் ரசிக்கப்படும் இந்த தொடர் தமிழில் அதிகம் வெளிவரவில்லை என்பது சோகத்தின் உச்சம். அது மட்டுமல்ல, உலக அளவில் விற்பனையில் தொடர்ந்து சாதனை படைக்கும் இந்த காமிக்ஸ் தொடர், தற்போது இந்தியாவில் நேரடி விற்பனைக்கும் கிடைக்கிறது.
தி இந்து தமிழ் நாளிதழின் மாயா பஜார் இணைப்பின் காமிக்ஸ் ஹீரோக்கள் பகுதியில் இவ்வார கட்டுரையை படித்து முழுக்கதையையும் தெரிந்து கொள்ளுங்கள்.
நமக்கு எல்லாம் நன்கு பரிச்சயம் ஆன காமிக்ஸ் கதாநாயகர்களை ஒரு மறு அறிமுகம் செய்யும் இப்பகுதியில் இன்று உலகம் ரசிக்கும் ஒரு இளைஞனைப் பற்றிய சிறு அறிமுகம் வெளியாகியுள்ளது.
இந்த பகுதியின் சிறப்பே அட்டகாசமான ப்ரொஃபைல் படங்கள் + கண்ணை கவரும் லேஅவுட் டிசைன் தான்.
ஆகவே, நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ......
வேறென்ன, தென்னிந்தியாவில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு என்று ஆறு பதிப்புகளை கொண்ட தி ஹிந்து தமிழ் நாளிதழை வாங்கி இந்த கட்டுரையை படிக்கவேண்டியதுதான்.
ஆர்ச்சியை பற்றிய அருமையான கட்டுரைக்கு நன்றி நண்பரே.
ReplyDelete