டியர் காமிரேட்ஸ்,
ஒரு தினசரி நாளிதழின் இணைப்பின் எடிட்டராக இருக்கிறார் அந்த இளைஞர். ஓஅதே பத்திரிக்கையில் வேறு பிரிவை சேர்ந்த ஒருவரின் கதைக்கு, இவர் ஓவியம் வரைந்து காமிக்ஸ் தொடராக வந்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் அந்த கதை மிகவும் சுமாரான கதை என்று இவர் கூற, பத்திரிக்கையின் எடிட்டர், அப்படியானால் நீயே ஏன் கதையும் எழுதி வரைந்து கொடுக்கக்கூடாது? என்று கேட்க, ஜனவர் 10ஆம் தேதியை காமிக்ஸ் உலகில் என்றென்றும் மறக்க முடியாத அளவுக்கு மாற்றிய ஒரு கதையை அவர் ஆரம்பித்தார்.
- இந்த கதையின் நாயகன் அவரது சகோதரனையே மாடலாக கொண்டு உருவாக்கப்பட்டவர்.
- இந்த கதையில் நாயகனுக்கு உதவும் மற்றொரு கதாபாத்திரத்தின் பெயர் அவரது முன்னாள் காதலியின் பெயரே.
- இந்த கதையில் நகைச்சுவைக்கு சுவையூட்ட வரும் இரட்டை கதாபாத்திரங்கள் இவரது தந்தை மற்றும் சித்தப்பாவை கொண்டு உருவாக்கப்பட்டது.
இப்படியாக குடும்பத்தையே கதையில் கொண்டு வந்த இவரது கதாபாத்திரம் காமிக்ஸ் உலகில் மட்டுமல்ல, ஓவியக்கலையிலும் ஒரு மாற்றத்தை உருவாக்கியது. அதுவரையில் இயங்கி வந்த ஓவிய பாணியையே மாற்றிய இந்த மேதையின் கதைகள் பல சர்ச்சையை உள்ளடக்கியவை.
இவரது ஆரம்ப கால கதைகள் பல நாடுகளில் தடை செய்யப்பட்டவை. சென்ற வாரம்கூட அமெரிக்காவில் மறுபடியும் தடைவிதிக்க கோரி ஒரு சர்ச்சை நடந்தது.
இவரது முதல் கதையில் பல தகவல் பிழைகள் இருந்ததால், அதனை மறுபிரசுரம் செய்யும் உரிமையை யாருக்கும் தராமல் தடை விதித்து இருந்தார். சமீபத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக அந்த கதை மறுபடியும் வெளியானது.
தி இந்து தமிழ் நாளிதழின் மாயா பஜார் இணைப்பின் காமிக்ஸ் ஹீரோக்கள் பகுதியில் இவ்வார கட்டுரையை படித்து முழுக்கதையையும் தெரிந்து கொள்ளுங்கள்.
நமக்கு எல்லாம் நன்கு பரிச்சயம் ஆன காமிக்ஸ் கதாநாயகர்களை ஒரு மறு அறிமுகம் செய்யும் இப்பகுதியில் இன்று உலகம் ரசிக்கும் ஒரு இளைஞனைப் பற்றிய சிறு அறிமுகம் வெளியாகியுள்ளது.
இந்த பகுதியின் சிறப்பே அட்டகாசமான ப்ரொஃபைல் படங்கள் + கண்ணை கவரும் லேஅவுட் டிசைன் தான்.
ஆகவே, நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ......
வேறென்ன, தென்னிந்தியாவில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு என்று ஆறு பதிப்புகளை கொண்ட தி இந்து தமிழ் நாளிதழை வாங்கி இந்த கட்டுரையை படிக்கவேண்டியதுதான்.
பின் குறிப்பு: இது யார் என்று யூகிக்க முடிகிறதா?
க்ளூ 1: இதுவரையில் தமிழில் வெளிவராத இந்த கதை இந்தியில் 2008ஆம் ஆண்டு வெளியானது.
க்ளூ 2: இவரது கதையை பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் திரைப்படமாக எடுத்தார்.
க்ளூ 3: அட, போங்க சார், இதுக்கு மேலே சொன்னால் ரொம்ப சுலபமாகி விடும்.
No comments:
Post a Comment