டியர் காமிரேட்ஸ்,
இந்த ஏப்ரல் மாத குமுதம் தீராநதியின் அட்டைப்பட கட்டுரையாக நம்முடைய “வரையரைகளை அத்துமீறும் கலகக்காரன்” என்ற முயற்சி வெளியாகி உள்ளது. என்னை பொருத்த அளவில், சமகால கிராபிஃக் நாவல் வாசிப்புக்கு இந்த கட்டுரை ஒரு முக்கியமான முயற்சியாக அமையும் என்றே நினைக்கிறேன்.
இந்த வார குமுதம் இதழில் வெளியாகி இருக்கும் தீராநதி இதழின் விளம்பரம்:
யார் இந்த கலகக்காரன்: ஒருவரிடமிருந்து பாரட்டு பெறுவது மிகவும் கடினமாக இருக்கும் தற்போதைய சூழலில், ஒரே துறையை சேர்ந்த (போட்டியாளர்களால்) கொண்டாடப்படுவதுதான் ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் உட்சபட்ச மரியாதை.
உதாரணமாக ஒரு ரசிகனாக, சச்சின் தெண்டுல்கரை நம்மால் பாராட்ட முடியும். ஆனால் அதே துறையில் உச்சத்தில் இருந்த சமகால விளையாட்டு வீரர்களும், போட்டியாளர்களும் பாராட்டினால் அந்த பாராட்டின் மதிப்பே தனி. பிரையன் லாராவும், ஷேன் வார்னேவும் சச்சினை பாராட்டும்போதுதான் அவருடைய மதிப்பு உயர்கிறது. ஏனென்றால் இது அந்த கலையை முழுமையாக உணர்ந்தவர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டு.
இப்படி, சமகால கிராபிஃக் நாவல் உலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ஒருவரால் “உலகிலேயே மிகச்சிறந்த காமிக்ஸ் கதை” என்று கொண்டாடப்படடும் ஒரு கதையின் படைப்பாளிதான் இந்த கட்டுரையின் நாயகன்.
ஒரு படைப்பாளியையும், அவரது படைப்புகளையும் தனியாக பிரித்து பார்க்கச் சொல்வதே சிறப்பான வாசிப்புக்கு உகந்தது. ஆனால் வரையரைகளை அத்துமீறுவதையே வ்ழக்கமாக கொண்ட இந்த கலகக்காரனுக்கு இந்த வாசிப்பு முறை சரிப்பட்டு வராது.
இவரது படைப்புகளை சரியாக ரசிக்க வேண்டுமெனில் இவரைப்பற்றியும், இவரது இயக்கத்தை பற்றியும் ஓரளவுக்காவது தெரிந்திருத்தல் அவசியம்.
- யார் அந்த சமகால கிராபிஃக் நாவல் உலகின் சூப்பர் ஸ்டார்?
- அவரால் பாரட்டப்பட்ட அந்த “உலகிலேயே மிகச்சிறந்த காமிக்ஸ் கதை” எது?
- அந்த கதையின் படைப்பாளி –கலகக்காரன் – யார்?
- ஏன் அவருடைய படைப்புகளையும், அவரையும் ஒருங்கே அவதானிக்க வேண்டும்?
- பேயோன் என்பது யார்? அவருக்கும் இந்த கலகக்காரனுக்கும் என்ன சம்பந்தம்?
இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த கட்டுரை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படியாக ஒரு அருமையான வாசிப்பு அனுபவத்தை பெற, உடனடியாக இந்த மாத குமுதம் தீராநதி இதழை வாங்கி பயன்பெறவும்.
தனிப்பிரதி: விலை ரூபாய் 20/-
ஆண்டு சந்தா: விலை ரூபாய் 300/-
ஆண்டு சந்தா (அயல்நாடு): ரூபாய் 800/- அல்லது 20 டாலர்.
சந்தா தொகையை DD / MO மூலம் Kumudam Publications pvt Ltd என்று எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்:
குமுதம் பப்ளிகேஷன்ஸ் பி லிமிடெட்,
பழைய எண் 151, புதிய எண் 306,
புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10.
தொடர்புக்கு: 044-264 22 148
என்சாய்.
financial year முடிவுறுவதால் எப்போதும் ஏற்படும் குளறுபடிகள் ஒருவழியாக ஓய்ந்தபடியால் நாளை M.O அனுப்ப உத்தேசித்து உள்ளேன் ....:)
ReplyDeleteநன்றி சார்.
Deleteவாழ்த்துகள் விஸ்வா !
ReplyDeleteஇங்கு பிரான்சிலும் தீராநதி கிடைக்கிறது.... மிக விரைவில் வாங்கிவிட்டு மீன்டும் கருத்திடுகிறேன்....
நன்றி
சாமானியன்
நன்றி, சாமானியரே.
Deleteஇனி தீராநதி தொடருகிறேன் சார் :)
ReplyDelete