Showing posts with label குமுதம் தீராநதி. Show all posts
Showing posts with label குமுதம் தீராநதி. Show all posts

Wednesday, 1 April 2015

வரையறைகளை அத்துமீறும் கலகக் காரன் – ஏப்ரல் தீராநதி கட்டுரை

டியர் காமிரேட்ஸ்,

இந்த ஏப்ரல் மாத குமுதம் தீராநதியின் அட்டைப்பட கட்டுரையாக நம்முடைய “வரையரைகளை அத்துமீறும் கலகக்காரன்” என்ற முயற்சி வெளியாகி உள்ளது. என்னை பொருத்த அளவில், சமகால கிராபிஃக் நாவல் வாசிப்புக்கு இந்த கட்டுரை ஒரு முக்கியமான முயற்சியாக அமையும் என்றே நினைக்கிறேன்.

இந்த வார குமுதம் இதழில் வெளியாகி இருக்கும் தீராநதி இதழின் விளம்பரம்:

Kumudam TheeraNathi April 2015 Advertisement in Kumudam Weekly Dated 06042015 on stand 30032015 Page No 123

யார் இந்த கலகக்காரன்: ஒருவரிடமிருந்து பாரட்டு பெறுவது மிகவும் கடினமாக இருக்கும் தற்போதைய சூழலில், ஒரே துறையை சேர்ந்த (போட்டியாளர்களால்) கொண்டாடப்படுவதுதான் ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் உட்சபட்ச மரியாதை.

உதாரணமாக ஒரு ரசிகனாக, சச்சின் தெண்டுல்கரை நம்மால் பாராட்ட முடியும். ஆனால் அதே துறையில் உச்சத்தில் இருந்த சமகால விளையாட்டு வீரர்களும், போட்டியாளர்களும் பாராட்டினால் அந்த பாராட்டின் மதிப்பே தனி.  பிரையன் லாராவும், ஷேன் வார்னேவும் சச்சினை பாராட்டும்போதுதான் அவருடைய மதிப்பு உயர்கிறது. ஏனென்றால் இது அந்த கலையை முழுமையாக உணர்ந்தவர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டு.

இப்படி, சமகால கிராபிஃக் நாவல் உலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ஒருவரால் “உலகிலேயே மிகச்சிறந்த காமிக்ஸ் கதை” என்று கொண்டாடப்படடும் ஒரு கதையின் படைப்பாளிதான் இந்த கட்டுரையின் நாயகன்.

ஒரு படைப்பாளியையும், அவரது படைப்புகளையும் தனியாக பிரித்து பார்க்கச் சொல்வதே சிறப்பான வாசிப்புக்கு உகந்தது. ஆனால் வரையரைகளை அத்துமீறுவதையே வ்ழக்கமாக கொண்ட இந்த கலகக்காரனுக்கு இந்த வாசிப்பு முறை சரிப்பட்டு வராது.

இவரது படைப்புகளை சரியாக ரசிக்க வேண்டுமெனில் இவரைப்பற்றியும், இவரது இயக்கத்தை பற்றியும் ஓரளவுக்காவது தெரிந்திருத்தல் அவசியம்.

  • யார் அந்த சமகால கிராபிஃக் நாவல் உலகின் சூப்பர் ஸ்டார்?
  • அவரால் பாரட்டப்பட்ட அந்த “உலகிலேயே மிகச்சிறந்த காமிக்ஸ் கதை” எது?
  • அந்த கதையின் படைப்பாளி –கலகக்காரன் – யார்?
  • ஏன் அவருடைய படைப்புகளையும், அவரையும் ஒருங்கே அவதானிக்க வேண்டும்?
  • பேயோன் என்பது யார்? அவருக்கும் இந்த கலகக்காரனுக்கும் என்ன சம்பந்தம்?

இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த கட்டுரை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படியாக ஒரு அருமையான வாசிப்பு அனுபவத்தை பெற, உடனடியாக இந்த மாத குமுதம் தீராநதி இதழை வாங்கி பயன்பெறவும்.

தனிப்பிரதி: விலை ரூபாய் 20/-

ஆண்டு சந்தா: விலை ரூபாய் 300/-

ஆண்டு சந்தா (அயல்நாடு): ரூபாய் 800/- அல்லது 20 டாலர்.

சந்தா தொகையை DD / MO மூலம் Kumudam Publications pvt Ltd என்று எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்:

குமுதம் பப்ளிகேஷன்ஸ் பி லிமிடெட்,

பழைய எண் 151, புதிய எண் 306,

புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10.

தொடர்புக்கு: 044-264 22 148

என்சாய்.

Saturday, 7 March 2015

தமிழின் முதல் கிராபிஃக் நாவல்: குமுதம் தீராநதி மார்ச் 2015

டியர் காமிரேட்ஸ்,

இந்த மார்ச் மாத குமுதம் தீராநதியின் அட்டைப்பட கட்டுரையாக நம்முடைய “தமிழின் முதல் கிராபிஃக் நாவல்” என்ற முயற்சி வெளியாகி உள்ளது. சமகால சித்திரக்கதை வாசிப்பு அனுபவத்திற்கு இந்த கட்டுரை மிகவும் முக்கியமான ஒன்றாக அமையும் என்று கருதுகிறேன்.

Kumudam TheeraNathi March 2015 Cover

இந்த கட்டுரையில்…..

  • சித்திரக்கதை (காமிக்ஸ்) மரபு உருவான வரலாறு
  • உலகின் முதல் சித்திரக்கதை (காமிக்ஸ்)
  • சித்திரக்கதைகளின் அமைப்பு
  • சித்திரக்கதைகளின் பரிணாம வளர்சி
  • சித்திரக்கதைகளுக்கும் (காமிக்ஸ்) கிராபிஃக் நாவலுக்கும் உள்ள வித்தியாசம்
  • உலகின் முதல் கிராபிஃக் நாவல்
  • தமிழில் இதுவரை வெளிவந்துள்ள கிராபிஃக் நாவல்கள்
  • தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட கிராபிஃக் நாவல்களின் விமர்சனம்
  • இந்தியாவில் தற்போது உருவாகிவரும் கிராபிஃக் நாவல்களின் அறிமுகம்
  • சிறந்த இந்திய கிராபிஃக் நாவல் படைப்பாளிகள்

என்று பல உள்ளடக்கங்களை கொண்ட ஒரு கட்டுரையாக உருவெடுத்துள்ளது. இதன் தொடர்ச்சி அடுத்த இதழில் வெளிவரும்.

Kumudam TheeraNathi March 2015 Credits Page

கட்டுரையின் ஒரு பகுதி:

Examples சித்திரக்கதைகளுக்கென்று ஒரு தனி வரையறை உண்டு. அவற்றை இங்கே காண்போம்.

ஒவ்வொரு காமிக்ஸ் கதையும் பேனல்கள் என்று அழைக்கப்படும் கட்டங்களால் உருவாக்கப்பட்டது. இந்த கட்டங்கள், பெரும்பாலும், எல்லைக்கோடுகளால் பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த பேனல்கள் தொடர்ச்சியான செயலின் ஒரு அங்கமாகும்.

ஒரு கதையை முக்கியமான சிறு சிறு பகுதிகளாக பிரித்து, அந்த சிறு பகுதிகளை ஓவியங்களால் விளக்கி, வார்த்தைகளால் அலங்கரித்து உருவாக்கப்பட்டதே ஒவ்வொரு பேனலும்.

இந்த கட்டங்களை ஒன்று சேர்த்து படிக்கும்போது அவை தொடர்ச்சியாக ஒரு கதையின் இயக்கத்தை விவரிக்கின்றன. இதற்க்காக இரண்டு விதமான கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன:

Caption என்று அழைக்கப்படும் கதையின் இயக்கத்தை விவரிக்கும் வகையில் மூன்றாம் நபரின் பார்வையில் கதாசிரியரால் எழுதப்பட்டு இருக்கும்.

Speech Balloon என்றழைக்கப்படும் வளிக்கூண்டுகள். இவை உரிய கதாபாத்திரங்களின் உரையாடலை விவரிக்கும். இந்த பலூன்களின் முனை யாரை நோக்கி இருக்கிறதோ, அவரது கருத்தாக புரிந்துக்கொள்ளப்பட வேண்டும். இந்த பலூன்களில் மொத்தம் நான்கு வகை உண்டு.

  1. கதாபாத்திரம் வழக்கம் போல, நடைமுறையாக பேசுவது
  2. இரகசியமாக, மெலிதான குரலில் பேசுவது
  3. எண்ணங்களாக மனதில் நினைப்பது
  4. உரக்க பேசுவது / கத்துவது – அலறுவது

இதிலேயே கூட சில வரையரைகள் உண்டு. ஒன்று கதாபாத்திரங்கள் பேசாமல், மூன்றாவது நபர் விவரிப்பின் மூலமாக கதையை சொல்வது. இரண்டாவது முறையில் கதாபாத்திரங்கள் பேச உதவியாக வார்த்தை வளிக்கூண்டுகள் (பேச்சு பலூன்கள்) உருவாக்கப்பட்டு, கதைமாந்தர்கள் பேசுவதைக்கொண்டு கதையை இன்னமும் விளக்கமாக நடைமுறை பாணியில் சொல்வது.

இப்படியாக ஒரு அருமையான வாசிப்பு அனுபவத்தை பெற, உடனடியாக இந்த மாத குமுதம் தீராநதி இதழை வாங்கி பயன்பெறவும்.

தனிப்பிரதி: விலை ரூபாய் 20/-

ஆண்டு சந்தா: விலை ரூபாய் 300/-

ஆண்டு சந்தா (அயல்நாடு): ரூபாய் 800/- அல்லது 20 டாலர்.

சந்தா தொகையை DD / MO மூலம் Kumudam Publications pvt Ltd என்று எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்:

குமுதம் பப்ளிகேஷன்ஸ் பி லிமிடெட்,

பழைய எண் 151, புதிய எண் 306,

புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10.

தொடர்புக்கு: 044-264 22 148

கட்டுரையை முடிக்கும் முன்பாக ஒரு சுவையான செய்தி: சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பிரபல வார இதழில் தமிழின் முதல் சித்திரக்கதையை அவர்கள் தான் வெளியிட்டதாக கூறி, ஒரு குறிப்பிட்ட இதழில் வெளியான கதையை பற்றி வெளியிட்டு இருந்தார்கள்.

ஆனால், அதற்க்கு முன்பாகவே தமிழில் பிரபல வெகுஜன பத்திரிக்கையில் காமிக்ஸ் கதையும், கிராபிஃக் நாவலும் வெளியிடப்பட்டதை இந்த கட்டுரையில் காணலாம்.

என்சாய்.

Wednesday, 11 February 2015

குமுதம் தீராநதி – பிப்ரவரி 2015 – கிராபிஃக் நாவல் விமர்சனம்

1995ஆம் ஆண்டு. ஒரு புதிய ஓவியர் தன்னுடைய காமிக்ஸ் / கிராபிஃக் நாவலை வெளியிடுகிறார். புதிய படைப்பாளி, அதிகம் பரிச்சயமில்லாத பதிப்பகம், எந்தவிதமான விளம்பரமும் இல்லாத சூழல் என்று பல தடைகள் இருந்தாலும் அந்த புத்தகம் பேசப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து அதே கதாசிரியரின் அடுத்த படைப்பு வெளியானபோது அமெரிக்காவே இவரை திரும்ப பார்த்தது. ஆனால் தன் மீது படிந்த அந்த புகழ் வெளிச்சத்தை நாடாமல் திடீரென காமிக்ஸ் துறையில் இருந்து விலகி தனக்கு பிடித்தமான பச்சை குத்துவதை தொடர சென்று விட்டார்.

அடுத்து பல ஆண்டுகளில் காமிக்ஸ் ரசிகர்களுக்கு அவரும், அவரது இரண்டு படைப்புகளுமே பல மழைக்கால மாலைநேரங்களின் விவாதப்பொருளாக இருந்து வந்தது. புகழின் உச்சத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பத்திலேயே முடித்துக்கொண்ட அந்த கதாசிரியர் சுமார் 17 ஆண்டுகள் கழித்து மறுபடியும் திரும்ப வந்து ஒரு கிராபிஃக் நாவலை படைக்கிறார் என்றால் அதன்மீதான ஆர்வம் எப்படி இருக்கும்? அல்லது அவரை திரும்ப வரவழைத்த அளவுக்கு அந்த கதை எப்படிப்பட்டதாக இருக்கும்?

Kumudam Theera Nathi Tamil Literary Magazine Issue Dated Feb 2015 Cover

  • யார் அந்த படைப்பாளி?
  • ஐஸ்னர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட அவரது கிராபிஃக் நாவலின் பெயர் என்ன?
  • இந்த நாவலில் இவர் செய்த புதுமை என்ன?
  • உலகமே பேச தயங்கிய காமிக்ஸ் அரசியலை இவர் எப்படி தைரியமாக முன்வைத்தார்?

இவருடனான உரையாடலில் இவர் தெரிவித்த கருத்துக்களை முன்வைத்து எழுதப்பட்ட இந்த நான்கு பக்க விமர்சனம் இம்மாத குமுதம் தீராநதி இதழில் வெளிவந்துள்ளது.

Kumudam Theera Nathi Tamil Literary Magazine Issue Dated Feb 2015 Index

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை தெரிவிக்க மறந்துவிடாதீர்கள்.