டியர் காமிரேட்ஸ்,
முழுக்க முழுக்க பெயின்டிங்கில், நுவார் பாணியில் காமிக்ஸ் மற்றும் பல்ப் பிக்ஷன் புத்தகங்களுக்கு அட்டைப்படங்களை வரைந்தவரும், ஃப்ரெட் ஃபிக்ஸ்லரின் மிகச்சிறந்த சீடரும், குருவை மிஞ்சிய சீடருமான க்ளென் ஆர்பிக் (Glen Orbik) நேற்று புற்றுநோயுடனான தன்னுடைய போராட்டத்தை நிறுத்திக்கொண்டார்.
52 வயதே ஆன இந்த அமெரிக்க ஓவியர், கலிஃபோர்னியா ஓவியக் கல்லூரியில் ஃப்ரெட் ஃபிக்ஸ்லரிடம் ஓவியம் பயின்று, பின்னர் அவர் ஓய்வு பெற்ற உடனே அவர் இடத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஓவியக் கலையின் நெளிவு சுளிவுகளை கற்பித்தார்.
அலெக்ஸ் ராஸ், ராபர்ட் மெக்கின்னஸ் போன்ற மகத்தான் ஓவியர்களுக்கு இணையாக கருதப்படும் இவர், தன்னுடைய களத்தை க்ரைம் நாவல்கள், காமிக்ஸ் புத்தக அட்டைப் படங்கள் என்று நிறுத்திக்கொண்டதால், இவரை ஒரு மேதை என்பதை “அறிவிஜீவிகள் நிறைந்த சமூகம்” ஒப்புக்கொள்ளவில்லை.
அவரது அதிகாரபூர்வ இணைய தளம் இது தான்: http://www.orbikart.com/gallery/
இங்கே அவரது பல ஓவிய மாதிரிகள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன.
அன்னாரின் சில பல ஓவியங்களை இப்போது உங்களின் பார்வைக்கு முன் வைக்கிறேன்.
அன்னாருக்கு அஞ்சலி.
க்ளென் ஆர்பிக் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteஅவரது பணியை அவரது மாணவர்கள் தொடருவார்கள் என நம்புவோம்.
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி