1971-ஆண்டு வெளிவந்த ஹிந்தி திரைப்படம் ஆனந்த். ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கி, ராஜேஷ் கண்ணா நடித்த இத்திரைப்படம் அந்த ஆண்டின் மிகச்சிறந்த இந்திய திரைப்படத்திற்கான நேஷனல் அவார்டை பெற்றது.
மேலும் ஃபில்ம்பேர் விருதுகளை, திரைப்படம், கதை, இயக்கம், நடிப்பு, வசனம், துணை நடிப்பு,பாடல்கள் ஆகியவற்றுக்காக பெற்றது. இந்த திரைப்படத்தின் ஒரு வசனம் இன்றளவும் வாழ்க்கையின் குறிக்கோளை எனக்கு சுட்டிக்காடும் விதமாகவே இருப்பதாக நான் கருதுகிறேன்.
அந்த வசனம்: ஆனந்த்: ”பாபு மோஷாய், ஜிந்தகி படீ ஹோனி சாஹியே, லம்பீ நஹி”. இதனை ஆங்கிலத்தில் Life is Supposed to Be BIG, Not LONG என்று மொழிபெயர்க்கலாம். தமிழில், ”வாழ்க்கை பெரியதாக இருக்க வேண்டும், நீண்டதாக இல்லை” என்று சொல்லலாம்.
அப்படிப்பட்ட ஒரு பெரிய வாழ்க்கையை வாழ்ந்த ஒரு லெஜெண்ட், ஒரு பெரிய மனிதரின் மரணம் நேற்று நடந்து இருக்கிறது. அவரது பெயர் லியோனார்ட் ஸ்டார் (இதை டைப் அடிக்கும்போது என்னுடைய விரல்களில் ஏற்பட்ட நடுக்கம் இன்னமும் குறையவில்லை).
இவரது வாழ்க்கை வரலாறை இங்கே சென்று படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். இவரைப்பற்றி என்னுடைய எண்ணங்களை, கருத்துகளை மட்டுமே இங்கே பதிவு செய்கிறேன்.
பொதுவாக, ஐரோப்பிய ஓவியர்களுக்கு அமெரிக்காவில் நல்ல மதிப்பு இருக்கும். அவர்களுடைய படைப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட்டு அங்கே வெளியாகும். ஆனால், அமெரிக்க ஓவியர்களின் படைப்புகள் ஐரோப்பாவில் அந்த அளவிற்கு செல்லுபடியாவதில்லை. இதற்கு பல காரணங்கள்.
ஆனால், அமெரிக்க ஓவியரான லியோனார்டோ ஸ்டார் அந்த கட்டுப்பாட்டை தகர்த்து, ஐரோப்பிய காமிக்ஸ் உலகிலும் தன்னுடைய தனித்திறமையை வெளிப்படுத்திய வெகு சில அமெரிக்க காமிக்ஸ் படைப்பாளிகளுல் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரும், (ஹார்ட் ஆஃப் ஜூலியன் ஜோன்ஸ் புகழ்) ஓவியர் ஸ்டான் டிரேக்கும் சேர்ந்து படைத்த கெல்லி க்ரீன் என்ற காம்க்ஸ் தொடர் ஃப்ரென்ச் காமிக்ஸ் இதழான பிலோட்டில் ஆரம்பித்தனர். முதலில் இந்த இதழில் கருப்பு வெள்ளையில் வெளியான இந்த தொடரின் அமோக வெற்றி, பதிப்பாளர்கள் டாரகூவை முழுவண்ண கலெக்டர்ஸ் எடிஷனை வரவழைத்தது. அது மட்டுமல்ல, இத்தொடரை அமெரிக்காவிலும் வெளியிட வைத்தது.
ஒரு ஓவியராக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து, திறமையான கதைசொல்லியாக உருவெடுத்த லியோனர்ட் ஸ்டார், ஓவியத்தின் அனைத்து விஷயங்களையும் அறிந்தவர் என்பதால், இத்தொடரின் ஒவ்வொரு பக்கமும் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகவே அமைத்தது. பிலோட் பத்திரிகை மாற்றங்களுக்கு உள்ளாகி இருந்த காலகட்டத்தில் வெளியானது என்பதால், முழுக்க முழுக்க முதிர்ச்சி அடைந்தவர்களுக்கான கண்டென்ட் தேவைப்பட்டதால், ஓவியங்களிலும், கதையின் ஓட்டத்திலும் சிறிது க்ளாமர் இருந்தது, தேவைப்பட்டது. உதாரணமாக, இந்த ஒரு பக்கத்தைப் பாருங்கள்:
முதல் வரிசையில் இருக்கும் மூன்று படங்களையும் பாருங்கள்: திரைப்பட மொழியில் சொல்வதானால், ஒவ்வொரு பேனலும் (கட்டமும்) ஒவ்வொரு கேமரா ஆங்கிள்.
முதல் பேனல்: Floor Level Shot
இரண்டாவது பேனல்: Eye Level Shot
மூன்றாவது பேனல்: Top Angle Shot
இது போக, நான்காவது மற்றும் ஆறாவது கட்டங்களில் Silhouette Shots, கடைசி இரண்டு கட்டங்களில் Mid Level Shot மற்றும் Close Up Shot (சோகத்தின் பரிணாமத்தை உணர்த்த) என்று அட்டகாசமாக விருந்து படைத்து இருப்பார்கள் இவர்கள்.
இப்படியாக ஒரு ஆல்ரவுண்டராக விளங்கிய லியோனார்டோ ஸ்டார் நேற்று தன்னுடைய இன்னிங்க்ஸை டிக்ளேர் செய்தார்.
பின் குறிப்பு: இந்த அட்டகாசமான தொடரை அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல காமிக்ஸ் மறுபதிப்பு நிறுவனமான க்ளாசிக் காமிக்ஸ் ப்ரெஸ் நிறுவனம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட இருக்கிறார்கள்.
அட்டகாசமான இந்த புத்தகப் புதையலில் இதுவரையில் முழு புத்தகமாக அச்சில் வெளிவராத இந்த தொடரின் ஐந்தாம் பாகமும் உள்ளது என்பது தான் Icing on the cake.
புத்தகத்தை Pre ஆர்டர் செய்ய: http://www.classiccomicspress.com/products/kelly-green-the-complete-collection
அன்னாருக்கு அஞ்சலி.
எனது ஆழ்ந்த வருத்தங்கள் :(
ReplyDeleterip!
ReplyDelete