Wednesday, 29 July 2015

கிங் விஸ்வாவின் பரிந்துரை: 2 #KingsChoice ஜூலை 29, 2015

டியர் காமிரேட்ஸ்,

இனிமேல் நான் வாங்கி படித்து மகிழ்ந்த சில பல புத்தகங்களை உங்களுக்கு பரிந்துரைக்கலாம் என்று இருக்கிறேன். அந்த வரிசையில் இரண்டாம் பதிவு:

Brian Froud

தேவதைக் கதைகளின் பைபிள்: ஆலன் மூர், நீய்ல் கெமன் கதைகளை படித்து வளர்பவன் நான் (திரைப்படமாகவும் கூட). ஏனென்றால், இவர்களின் அந்த அதீத கற்பனை, மாயா வினோத உலகங்கள், மந்திர ஜாலங்கள், தேவதைகள் என்று ஒரு அழகான புதியதொரு உலகிற்கு என்னை அழைத்துச் செல்பவை இவையே.

அப்படி இருக்க, சமீபத்தில் இலண்டனில் இருக்கும் ஒரு காமிக்ஸ் கதாசிரியர், படைப்பாளி, எடிட்டருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது தான் அவர் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைச் சொல்லி, இதுதான் தேவதைக் கதைகளின் பைபிள். இதை முதலில் படியுங்கள் என்று பரிந்துரைத்தார். அவரது வாக்கை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, இதோ, ஆர்டர் செய்து விட்டேன்.

இந்த புத்தகத்தின் படைப்பாளி ப்ரையன் ஃப்ரௌட் (https://en.wikipedia.org/wiki/Brian_Froud) பற்றி அழகாக எடுத்துச் சொல்லிய அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி, நன்றி, நன்றி.

தலைப்பு: Good Faeries/Bad Faeries

கதாசிரியர்: Brian Froud

எடிட்டர்: Terri Windling

பதிப்பகம்: Simon & Schuster

பக்கங்கள்: 192

அமைப்பு:  Multi Colour

டிசைன்: 9.2 x 0.9 x 11.2 inches

வெளியான தேதி: October 15, 1998

விலை: 20.81 $

குறிப்பு: ப்ரையன் ஃப்ரௌட் கைவண்ணத்தில் மெருகூட்டப்பட்ட புத்தகம் இது

புத்தகத்தை வாங்க, http://www.amazon.com/Good-Faeries-Bad-Brian-Froud/dp/0684847817

 

Eagle Annuals

2. ஒரு சிறுவர் இதழுக்காக ப்ராஜெக்ட் ஒன்றை எடுத்து இருக்கிறேன். அதற்காக பல பழைய பிரிட்டிஷ் சிறுவர் இலக்கிய புத்தகங்களை தேடிப்பிடித்து வருகையில், இது கண்ணில் பட்டது.

பிரிட்டனின் ஈகிள் காமிக்ஸ் இதழை இன்றும் பலர் நினைவில் வைத்திருக்க காரணம், அந்த இதழில் வெளியான டான் டேர் என்ற அட்டகாசமான காமிக்ஸ் கதையே. ஆனால், அதற்கு அடுத்தபடியாக அந்த இதழில் சிறப்பான இடத்தைப் பிடித்தது ஈகிள் கட் அவேஸ் என்ற ஓவிய சிறப்புகளே.

ஆஷ்வெல் வுட் அவர்களின் மேற்பார்வையில் வெளியான சிலநூறு ஓவியங்களை தொகுத்து, மிகவும் மெனக்கெட்டு சோபியா டோனில் கொண்டு வந்து, அட்டையை கிழிந்த ஒரு பழைய புத்தகம் போல காட்சி அளிக்க வைத்து, ஒரு 60 ஆண்டு பழைய புத்தகத்தை வாங்க வைக்கும் உணர்வை கொடுத்து உள்ளனர். இதற்காக என்ன விலை என்றாலும் கொடுக்கலாம். தவறே இல்லை.

தலைப்பு: The Eagle Annual of the Cutaways

கதாசிரியர்: Assorted

ஓவியர்: L Ashwell Wood & Others

பதிப்பகம்: Orion

பக்கங்கள்: 176

அமைப்பு:  Multi Colour

டிசைன்: 27.7 x 21.6 x 1.5 cm

வெளியான தேதி: 25 September 2008

விலை:Rs 7, 767/-

குறிப்பு: எதற்காக இந்த புத்தகத்தை வாங்கினேன் என்பதை இப்போது கேட்காதீர்கள், ப்ளீஸ்...

புத்தகத்தை வாங்க:

http://www.amazon.in/Eagle-Annual-Cutaways-Daniel-Tatarsky/dp/1409100146

விமர்சனம்? விரைவில்…. மிக விரைவில்.

2 comments:

  1. வணக்கம்

    இன்று வலைச்சரத்தில் என் நன்றியுரை...

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

    உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

    ReplyDelete