Friday, 4 September 2015

இரு சகோதரர்கள் - சித்திரக்கதை

டியர் காமிரேட்ஸ்,

எழுத்தாளர் ஆர் வி அவர்கள் கதை எழுதி, ஓவியர் ஸ்ரீ அவர்களின் கைவண்ணத்தில் சித்திரக்கதையாக கண்ணன் இதழில் வெளிவந்து, பின்னர் 1966 ஆம் ஆண்டு வானதி பதிப்பகம் மூலமாக தனி புத்தகமாக பதிப்பக வெளியீடாக வந்த புத்தகம் தான் இரு சகோதரர்கள்.

16 பக்கங்களைக் கொண்டு, கருப்பு வெள்ளையில் வெளியான இந்தப் புத்தகம், கடைசியாக 1986 ஆம் ஆண்டு கடைசியாக மறுபதிப்பு செய்யப்பட்டது.

RV Comics

இந்த புத்தகம் சற்றே அரிய புத்தகமாகும் என்பதால், ஐந்து புத்தகம் மட்டுமே எனக்கு நேற்று கிடைத்தது. அனைத்துமே புத்தம் புதிய, இதுவரையில் பிரித்துக்கூட பார்க்கப்படாதவை என்பதே இவற்றின் சிறப்பம்சம். வழக்கம் போல இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட “சோர்ஸ்” இடமிருந்தே கிடைக்கப்பெற்றவை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.

ஆகவே, தேடல் மிகவும் முக்கியமானது என்பதை இந்த புத்தகங்கள் உணர்த்துகின்றன.

பின்குறிப்பு: இவை நேற்று தான் கைவரப்பெற்றது என்பதை குறிக்கவே, நேற்றைய தினமலரை வைத்து, புகைப்படம் எடுத்துள்ளேன்.

Tuesday, 1 September 2015

காமிக்ஸ் உலகில் மறுபடியும் ஜேம்ஸ் பாண்ட் 007



டியர் காமிரேட்ஸ்,
கடைசியாக ஜேம்ஸ் பாண்ட் 007 ஒரு காமிக்ஸ் கதையாக வெளிவந்து ஏறக்குறைய 25 ஆண்டுகள் ஆகப்போகிறது. இந்த ஆண்டு ஜேம்ஸ் பாண்டின் புதிய திரைப்படம் வெளிவருவதை ஒட்டி அமெரிக்காவைச் சேர்ந்த டைனமைட் காமிக்ஸ் நிறுவனம் புத்தம் புதிய ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ் கதைகளை உருவாக்க அனுமதி பெற்றதை ஏற்கனவே சொல்லி இருந்தேன்.

ஆனால், டைனமைட் இதைப்போலவே வேதாளர், மந்திரவாதி மாண்ட்ரேக், ஃப்ளாஷ் கார்டன் ஆகிய Evergreen Heroக்களின் கதைகளை, புதியதாக உருவாக்குகிறேன் பேர்வழி என்று கொத்துக்கறி போட்டு வருகிறது. இதனாலேயே ஒரு பயம் இருந்தாலும், எப்போது அவர்கள் Warren Ellisஐ கதாசிரியராக அறிவித்தார்களோ, அப்போதே பாதி வென்று விட்டார்கள்.
 
வாரன் எல்லிஸ் செய்த முதல் வேலை என்ன தெரியுமா? ஓவியராக Jason Master அவர்களை ஒப்பந்தம் செய்யச்சொல்லி வற்புறுத்தி, அதில் வெற்றியும் கண்டது தான். ஆக, இருபெரும் அசாத்திய திறமைசாலிகளின் மிரட்டலான இணையில் உருவாகப்போகும் இந்த புதிய ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ் தொடர் மொத்தம் ஐந்து பாகங்களைக் கொண்டதாகும். ஒவ்வொரு பாகமும் 32 பக்கங்களை கொண்டு, நவம்பரில் துவங்க இருக்கும் இத்தொடர் பற்றி இப்போதே காமிக்ஸ் ஆர்வலர்களிடம் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடிவருகிறது.
பதிப்பாளர்: டைனமைட்
தொடரின் பெயர்: VARGR
கதாசிரியர்: வாரன் எல்லிஸ்
ஓவியர்: ஜேசன் ராபர்ட்ஸ்
மொத்த பாகங்கள்: 5
பக்கங்கள்: 32
முதல் இதழ் வெளியாகும் நாள்: நவம்பர் 4, 2015.
விலை: 3.99 டாலர்.
கதைச்சுருக்கம்: Beginning “VARGR”, the first story in the ongoing James Bond comic series by best-selling writer Warren Ellis! James Bond returns to London after a mission of vengeance in Helsinki, to take up the workload of a fallen 00 Section agent. But something evil is moving through the back streets of the city, and sinister plans are being laid for Bond in Berlin...  
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif
ஓவியர் ஜேசன், தனது தளத்தில் இந்த தொடரின் சில பல டீசர் ஓவியங்களை வெளியிட்டு அசத்தி வந்தார். ஆனால், இன்று அதிகாரபூர்வமாக அட்டைப்படத்தையும், வேறு சில Alternate Version Cover படங்களையும் வெளியிட்டு உள்ளார்கள்.

இதோ, அந்த மாற்று அட்டைப்படங்கள். என்சாய்.




Wednesday, 19 August 2015

R.I.P. Yvonne Craig ஈவான் க்ரெய்க் (முதன்மையான Bat Girl)

வாழ்க்கையில் எந்த விதமான யோசனையோ, திட்டமிடுதலோ இல்லாமல் நாம் செய்யும் சில செயல்கள், சமுதாயத்தில் ஒரு பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி விடும், நம்மையறியாமலே.

இன்று வந்த ஒரு சோகமான செய்தி அப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வந்த ஒரு பெண்ணைப் பற்றியதே.

1937இல் அமெரிக்காவில் பிறந்து, முறைப்படி பாலே நடனம் கற்று, சில ஆண்டுகள் எல்விஸ் ப்ரெஸ்லியின் தோழியாக (Both, On Screen & Off screen) நடித்து, பின்னர் பல தொலைக்காட்சி தொடர்களில் முத்திரை பதித்தவர் ஈவான் க்ரெய்க்.



இவர் பல காமிக்ஸ் கதைகளை சார்ந்த தொடர்களில் நடித்து இருந்தாலும் (Perry Mason, Man from U.N.C.L.E, The Six Million Dollar Man) தன்னுடைய 29ஆவது வயதில் இவர் நடித்த வேடம் தான் இன்றளவுக்கும் இவரது நினைவாக போற்றப்படுகிறது (நம்மை இந்தப் பதிவு எழுத வைத்ததும் இந்த தொடர் தான்).

1967-68 ஆம் ஆண்டில் அமெரிக்க தொலைக்காட்சி தொடராக வந்த Batman தொடரில் இவர் Bat Girl ஆக நடித்தார்.


முதலில் அந்த வேடத்தில் நடிக்கும்போது, ஜாலியான ஒரு கதைத்தொடரில் நடிப்பதாகவே நினைத்தாராம். ஆனால், பிறகு தான் பிறர் (ஆண்கள்) உதவியின்றி சிந்திக்கக்கூடிய, வலிமையுள்ள, திறமையான ஒரு பெண்ணை தன்னுடைய நடிப்பின் மூலமாக உலகிற்கு அடையாளம் காட்டினார் ஈவான்.

இவரது நடிப்பு உலகமெங்கும் பல பெண்களை இந்த தொடரை பார்க்க வைத்தது. DC Comics இந்த தொடரை வைத்து ஒரு முழுநீள காமிக்ஸ் தொடரை தயாரித்து வெளியிட்டது. பல முறை இந்த தொடர் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. பலமுறை பெண்களுக்கான கருத்துக்கணிப்பில் Bat Girlஐ ஒரு பெண்ணியவாதியாக, ஒரு இலட்சிய உருவமாக, தன்னம்பிக்கையின் மறுவடிவமாக, தேர்ந்தெடுக்கப்பட காரணமாக அமைந்தது.



இந்தியாவில் Star World சேனல் வந்தபோது, இத்தொடர் ஒளிபரப்பப் பட்டது. அப்போது தான் இவரைப்பற்றிய அறிமுகமும் வந்தது.

பின் குறிப்பு: 1988ஆம் ஆண்டு BatMan தொடரில் ஒரு சகாப்தமாக கருதப்படும் The Killing Joke கதையில், பார்பாரா கோர்டனை ஜோக்கர் Paralyze செய்தபோது அதை கடுமையாக எதிர்த்து, DC Comics நிர்வாகத்திற்கு தன்னுடைய எதிர்ப்பையும் தெரிவித்தவர் இவர்.


கேன்சருடனான தன்னுடைய போராட்டத்தை ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் முடித்துக்கொண்ட ஈவான் க்ரெய்க் நமக்குசொல்லும் செய்தி ஒன்றே ஒன்று தான்: பெண்களை மதியுங்கள். ஏனென்றால், அவர்கள் அந்த மரியாதைக்கு உகந்தவர்கள்.

Wednesday, 29 July 2015

கிங் விஸ்வாவின் பரிந்துரை: 2 #KingsChoice ஜூலை 29, 2015

டியர் காமிரேட்ஸ்,

இனிமேல் நான் வாங்கி படித்து மகிழ்ந்த சில பல புத்தகங்களை உங்களுக்கு பரிந்துரைக்கலாம் என்று இருக்கிறேன். அந்த வரிசையில் இரண்டாம் பதிவு:

Brian Froud

தேவதைக் கதைகளின் பைபிள்: ஆலன் மூர், நீய்ல் கெமன் கதைகளை படித்து வளர்பவன் நான் (திரைப்படமாகவும் கூட). ஏனென்றால், இவர்களின் அந்த அதீத கற்பனை, மாயா வினோத உலகங்கள், மந்திர ஜாலங்கள், தேவதைகள் என்று ஒரு அழகான புதியதொரு உலகிற்கு என்னை அழைத்துச் செல்பவை இவையே.

அப்படி இருக்க, சமீபத்தில் இலண்டனில் இருக்கும் ஒரு காமிக்ஸ் கதாசிரியர், படைப்பாளி, எடிட்டருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது தான் அவர் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைச் சொல்லி, இதுதான் தேவதைக் கதைகளின் பைபிள். இதை முதலில் படியுங்கள் என்று பரிந்துரைத்தார். அவரது வாக்கை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, இதோ, ஆர்டர் செய்து விட்டேன்.

இந்த புத்தகத்தின் படைப்பாளி ப்ரையன் ஃப்ரௌட் (https://en.wikipedia.org/wiki/Brian_Froud) பற்றி அழகாக எடுத்துச் சொல்லிய அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி, நன்றி, நன்றி.

தலைப்பு: Good Faeries/Bad Faeries

கதாசிரியர்: Brian Froud

எடிட்டர்: Terri Windling

பதிப்பகம்: Simon & Schuster

பக்கங்கள்: 192

அமைப்பு:  Multi Colour

டிசைன்: 9.2 x 0.9 x 11.2 inches

வெளியான தேதி: October 15, 1998

விலை: 20.81 $

குறிப்பு: ப்ரையன் ஃப்ரௌட் கைவண்ணத்தில் மெருகூட்டப்பட்ட புத்தகம் இது

புத்தகத்தை வாங்க, http://www.amazon.com/Good-Faeries-Bad-Brian-Froud/dp/0684847817

 

Eagle Annuals

2. ஒரு சிறுவர் இதழுக்காக ப்ராஜெக்ட் ஒன்றை எடுத்து இருக்கிறேன். அதற்காக பல பழைய பிரிட்டிஷ் சிறுவர் இலக்கிய புத்தகங்களை தேடிப்பிடித்து வருகையில், இது கண்ணில் பட்டது.

பிரிட்டனின் ஈகிள் காமிக்ஸ் இதழை இன்றும் பலர் நினைவில் வைத்திருக்க காரணம், அந்த இதழில் வெளியான டான் டேர் என்ற அட்டகாசமான காமிக்ஸ் கதையே. ஆனால், அதற்கு அடுத்தபடியாக அந்த இதழில் சிறப்பான இடத்தைப் பிடித்தது ஈகிள் கட் அவேஸ் என்ற ஓவிய சிறப்புகளே.

ஆஷ்வெல் வுட் அவர்களின் மேற்பார்வையில் வெளியான சிலநூறு ஓவியங்களை தொகுத்து, மிகவும் மெனக்கெட்டு சோபியா டோனில் கொண்டு வந்து, அட்டையை கிழிந்த ஒரு பழைய புத்தகம் போல காட்சி அளிக்க வைத்து, ஒரு 60 ஆண்டு பழைய புத்தகத்தை வாங்க வைக்கும் உணர்வை கொடுத்து உள்ளனர். இதற்காக என்ன விலை என்றாலும் கொடுக்கலாம். தவறே இல்லை.

தலைப்பு: The Eagle Annual of the Cutaways

கதாசிரியர்: Assorted

ஓவியர்: L Ashwell Wood & Others

பதிப்பகம்: Orion

பக்கங்கள்: 176

அமைப்பு:  Multi Colour

டிசைன்: 27.7 x 21.6 x 1.5 cm

வெளியான தேதி: 25 September 2008

விலை:Rs 7, 767/-

குறிப்பு: எதற்காக இந்த புத்தகத்தை வாங்கினேன் என்பதை இப்போது கேட்காதீர்கள், ப்ளீஸ்...

புத்தகத்தை வாங்க:

http://www.amazon.in/Eagle-Annual-Cutaways-Daniel-Tatarsky/dp/1409100146

விமர்சனம்? விரைவில்…. மிக விரைவில்.

Saturday, 25 July 2015

நம்ம அடையாளம்: தமிழ் வார இதழ்


டியர் காமிரேட்ஸ்,

திடீரென்று நடக்கும் எந்த ஒரு (நல்ல) விஷயமுமே நம்மிடையே ஒரு கலவையான (அதே சமயம்) சந்தோஷமான ஒரு ரியாக்‌ஷனையே கொணரும். அப்படித்தான் கடந்த ஓரிரு நாட்களாக நூற்றுக்கும் மேலான முகநூல் நட்பு அழைப்புகள். ஏன்? எப்படி? எதற்கு? என்று விளங்கவே இல்லை.


குமுதம் குழுமத்திலிருந்த திரு கோசல்ராம் அவர்கள், லேட்டஸ்டாக துவக்கியுள்ள நம்ம அடையாளம் என்ற தமிழ் வார இதழை நான் முதல் இஷ்யூவிலிருந்தே தொடர்ந்து வாங்கி வருகிறேன்.

 நேற்று இரவு இந்த பத்திரிக்கையின் லேட்டஸ்ட் இதழை வாங்கியபோது, நிஜம்மாகவே ஒரு இன்ப அதிர்ச்சி தான். தமிழ் காமிக்ஸ் உலகம் என்ற என்னுடைய முகநூல் பக்கத்தைப் பற்றி ஒரு பக்கம் முழுக்க அழகாக, தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.


நம்ம அடையாளம் ஆசிரியர் குழுவிற்கு நன்றி

Thursday, 23 July 2015

#KingsChoice 1: ஜூலை 23, 2015

டியர் காமிரேட்ஸ்,

இனிமேல் நான் வாங்கி படித்து மகிழ்ந்த சில பல புத்தகங்களை உங்களுக்கு பரிந்துரைக்கலாம் என்று இருக்கிறேன். அவற்றில் முதல் படியாக, இதோ இந்த வரிசையில் முதல் பதிவு:

Image 1

ஸ்காட் ஸ்னைடர் + ஷான் மர்ஃப்பி இணைந்து மிரட்டிய “தி வேக்”

தலைப்பு: The Wake

கதாசிரியர்: Scott Snyder

ஓவியர்: Sean Murphy

பதிப்பகம்: Vertigo

பக்கங்கள்: 256

அமைப்பு:  Multi Colour

டிசைன்: A4

வெளியான தேதி: 11th Nov 2014.

விலை:1139/-

குறிப்பு: Winner of the 2014 Eisner Award for Best Limited Series.

ஸ்காட் ஸ்னைடர் + ஷான் மர்ஃப்பி இணைந்து மிரட்டிய “தி வேக்” புத்தகத்தை வாங்க, 

http://www.amazon.in/Wake-Scott-Snyder/dp/1401245234/ref=sr_1_1?ie=UTF8&qid=1437657810&sr=8-1&keywords=The+Wake+scott+snyder

The Wake Cover

அடுத்த ஆண்டு திரைப்படமாக வெளியாகவிருக்கும் கதாசிரியர் ரான்சன் ரிக்ஸ்’சின் அட்டகாசமான முதல் நாவலை, ஒரிஜினல் ஆங்கில மாங்காவாக படைத்து இருக்கிறார் ஓவியர் கேஸ்ஸண்ட்ரா ஜீன்.

தலைப்பு: Miss Peregrine's Home for Peculiar Children

கதாசிரியர்: Ransom Riggs

ஓவியர்: Cassendra Jean

பதிப்பகம்: Headline Publishing Group

பக்கங்கள்: 272

அமைப்பு:  B & W, Colour and everything.

டிசைன்: Demi

வெளியான தேதி: 29th Oct 2013

விலை: 962 

குறிப்பு:  Tim Burton is directing this as a Film to be released on 4th March 2016.

இந்தப் புத்தகத்தை வாங்க,

http://www.amazon.in/Miss-Peregrines-Home-Peculiar-Children/dp/0316245283

Miss Peregrine's Home for Peculiar Children Cover

மிக மிக விரைவில் இவற்றின் விமர்சனத்தை அளிக்கிறேன்.

அதுவரை, Happy Reading, ComiRades.

#RIP Tom Moore அன்னாருக்கு அஞ்சலி

டியர் காமிரேட்ஸ்,

காமிக்ஸ், சினிமா மற்றும் கதைகளில் நாம் காணும் அதி புத்திசாலிகளையும், வீர பராக்கிரம நாயகர்களையும் கடந்து அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் சாதாரண, சற்றே சொதப்பலான ஒரு கதாபாத்திரம் நம்மை கவர்வதில் ஆச்சரியமே கிடையாது. அந்த வகையில் இன்றைக்கு உலக அளவில் இளைய தலைமுறை வாசகர்களால் அதிகமாக விரும்பி படிக்கப்படும் காமிக்ஸ் தொடரான ஆர்ச்சியின் கதாநாயகன் ஒரு சாதாரண நடுத்தர இளைஞன் என்பதும், அவனை நமது பக்கத்து வீட்டுக்காரனாக பொருத்தி பார்க்க முடிவதுமே முக்கியமான காரணங்கள்.

Archie Team Profile Picture 4

காமிக்ஸ் கதைகளை வெளியிடுவதற்க்காக ஜான் கோல்ட்வாட்டர் தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து MLJ என்ற பத்திரிக்கை நிறுவனத்தை 1939ல் துவக்கினார். அப்போது ஆன்டி ஹார்டி என்ற திரைப்பட தொடர் இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. அதே பாணியில் ஒரு கதைத்தொடரை உருவாக்க நினைத்த ஜான், பயணங்களில் தான் சந்தித்த நபர்களை மனதில் கொண்டு துணை கதாபாத்திரங்களை உருவாக்கினார்.

Archie Team Profile Picture 3

இப்படியாக ஒரு தொடருக்கான வடிவம் கிடைத்த உடன் கதாசிரியர் விக் ப்ளூம் மற்றும் ஓவியர் பாப் மொண்டானா ஆகியோரைக்கொண்டு 1941ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் ஆர்ச்சி கதாபாத்திரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். வெகுவிரைவில் இத்தொடர் பிரபலமாக, காமிக்ஸ் தொடரின் பெயரையே ஆர்ச்சி காமிக்ஸ் என்று மாற்றிவிட்டார். தன்னுடைய பள்ளி நண்பர்களையும், அவர்கள் புழங்கிய இடங்களையும் மனதில் கொண்டு ஓவியர் மொண்டானாவும் பல கதாபாத்திரங்களை உருவாக்கினார்.

டாம் மூர் & ஆர்ச்சி காமிக்ஸ்: (1928 – 20th July 2015) 86

Tom Moore

இப்படிப்பட்ட ஆர்ச்சி காமிக்ஸ் தொடருக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக உயிரூட்டிய ஒரு அட்டகாசமான ஓவியர் தான் டாம் மூர். 1928ஆம் ஆண்டு அமெர்க்காவின் எல் பாசோவில் பிறந்த இவர், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நியூ யார்க்கில் இருந்த ஓவியப்பள்ளியில் சேர்ந்து முறையாக பயிற்சி பெற்றார் இவர். அப்போது அவருக்கு கற்பித்தவர் யார் தெரியுமா? டார்ஜான் கதாபாத்திரத்திற்கு ஓவியங்கள் மூலமாக உயிரூட்டிய Burne Hogarth தான்.

ஓவியக் கலையை முறையாக கற்ற பின்னர், நியூ யார்க்கிலேயே இவருக்கு ஆர்ச்சி காமிக்ஸ் கதையில் பண்புரியும் வாய்ப்பு 1951ல் கிடைக்க, உடனடியாக அதனை ஏற்றுக்கொண்டார் டாம். இப்படியாக சில பல ஆண்டுகள் நியூயார்க்கில் தங்கி இருந்த இவருக்கு ”நினைவில் காடு இருந்ததை” அவர் மறுபடியும் உணர்ந்து, மலைகள் நிறைந்த தனது சொந்த ஊரான  டெக்சாஸுக்கு 1961ல் திரும்பினார்.

ஜக்ஹெட் ஜோன்ஸ் & டாம் மூர்:

Jughead Jones

அப்போது ஆர்ச்சி காமிக்ஸ் கதைகளில் ஒருவித தொய்வு ஏற்பட்ட் இருந்ததை உணர்ந்த எடிட்டர் விக்டர் கோர்லிக், அதனை எப்படி சரிகட்டுவது என்று சிந்தித்து வந்தார். அவரது சிந்தனையில் தோன்றிய முதல் நபர் டாம் மூர் தான்.

உடனே தொலைபேசியில் அவரை அழைத்த விகடர், சூழ்நிலையை விளக்க, மறுபடியும் ஆர்ச்சி காமிக்ஸ் தொடருக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் டாம்.

ஜக்ஹெட் ஜோன்ஸ் கதாபாத்திர மறு வடிவமைப்பு: ஒல்லியாக இருக்கும் ஜக்ஹெட், எப்படி இவ்வளவு உணவை சாப்பிடுகிறான் என்பது இன்றுவரை ஒரு புரியாத புதிர். மூடிய டின்னில் இருப்பது என்ன வகையான உணவு என்று சொல்லும் திறமைசாலியான ஜக்ஹெட், ஒரு தேர்ந்த சுவை நிபுணன். இவனது செயல்கள் அனைத்தும் இவனை ஒரு சோம்பேறி போல காட்டினாலும், சந்தர்ப்பங்களில் இவனது மூளை அபாரமாக செயல்படும். இவனது வளர்ப்பு நாயான ஹாட் டாக் ஜக்ஹெட்டைப்போலவே அதிகமாக சாப்பிடும். ஆர்ச்சி காமிக்ஸ் தொடரில் வரும் மற்ற கதாபாத்திரங்களை போலில்லாமல் ஜக்ஹெட் முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தை மறு சீரமைத்துக் கொடுத்தார் டாம். அதன் பின்னர் மறுபடியும் தொடர்ந்து வரையத் துவங்கினார்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் முன்கூட்டியே செயல்படுவாராராம் டாம். அதாவது டிசம்பர் இறுதியில் வெளியாகும் Christmas Special கதைகளை இவர் ஜூன் மாதத்திலேயே வரைந்து விடுவாராம். ஒவ்வொரு மாதமும் ஒரு முழு புத்தகத்திற்கான கதையை வரைந்து கொடுத்து வந்த இவர், 1986இல் தனது முதுமை காரணமாக ஓய்வு பெற்றார்.

IMG-20150723-WA0001

மறைவு: கடந்த வாரம் தொண்டைப்புற்று நோய் இருப்பதை அறிந்த இவர், சிகிச்சைக்கு உட்பட மறுத்து விட்டார். மூன்று நாட்களுக்கு முன்பாக இறைவனடி சேர்ந்தார் டாம்.

அன்னாருக்கு அஞ்சலி.