டியர் காமிரேட்ஸ்,
எழுத்தாளர் ஆர் வி அவர்கள் கதை எழுதி, ஓவியர் ஸ்ரீ அவர்களின் கைவண்ணத்தில் சித்திரக்கதையாக கண்ணன் இதழில் வெளிவந்து, பின்னர் 1966 ஆம் ஆண்டு வானதி பதிப்பகம் மூலமாக தனி புத்தகமாக பதிப்பக வெளியீடாக வந்த புத்தகம் தான் இரு சகோதரர்கள்.
16 பக்கங்களைக் கொண்டு, கருப்பு வெள்ளையில் வெளியான இந்தப் புத்தகம், கடைசியாக 1986 ஆம் ஆண்டு கடைசியாக மறுபதிப்பு செய்யப்பட்டது.
இந்த புத்தகம் சற்றே அரிய புத்தகமாகும் என்பதால், ஐந்து புத்தகம் மட்டுமே எனக்கு நேற்று கிடைத்தது. அனைத்துமே புத்தம் புதிய, இதுவரையில் பிரித்துக்கூட பார்க்கப்படாதவை என்பதே இவற்றின் சிறப்பம்சம். வழக்கம் போல இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட “சோர்ஸ்” இடமிருந்தே கிடைக்கப்பெற்றவை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.
ஆகவே, தேடல் மிகவும் முக்கியமானது என்பதை இந்த புத்தகங்கள் உணர்த்துகின்றன.
பின்குறிப்பு: இவை நேற்று தான் கைவரப்பெற்றது என்பதை குறிக்கவே, நேற்றைய தினமலரை வைத்து, புகைப்படம் எடுத்துள்ளேன்.
No comments:
Post a Comment