Monday, 7 September 2015

அன்னாருக்கு அஞ்சலி: #RIP Brad Anderson

டியர் காமிரேட்ஸ்,
இன்று ஒரு சோகமான தகவல் வந்து சேர்ந்தது. மற்றுமொரு காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் நம்மை விட்டுச் சென்றார் என்பதே அந்த தகவல். #RIP Brad Anderson

விலங்குகளை வைத்து கார்ட்டூன் மற்றும் காமிக்ஸ் தொடர்கள் பல இருந்தாலும், அவற்றில் அந்த விலங்குகளின் கண்களையோ, உணர்ச்சிகளையோ பிரதிபலிப்பது போல ஏன் யாரும் வரைவது இல்லை? என்ற கேள்விக்கு பதிலாக உருவாகிய ஓவியர் தான் பிராட் ஆண்டர்ஸன். தன்னுடைய 15 ஆவது வயதிலேயே தான் வரைந்த ஓவியம் பத்திரிகையில் வந்ததைக் கண்டு, தீவிரமாக ஓவியம் வரைய ஆரம்பித்த இவர், விளம்பர நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்ந்தார். 

1954இல் இவர் இரண்டு காமிக்ஸ் தொடர்களை ஆரம்பித்தார். அவற்றுள் ஒன்று தான் மர்மட்யூக். Great Dane வகையைச் சேர்ந்த ஒரு நாயின் சாகசங்களை, கோணங்கித்தனங்களை தினமும் காமிக்ஸ் ஸ்ட்ரிப் வடிவில் வழங்கினார் ஆண்டர்ஸன். அன்று முதல் இவரது மரணம் வரையில் (60 ஆண்டுகளுக்கு பிறகும்) 500 பத்திரிகைகளுக்கும் மேலே இவரது தொடர் வந்துக்கொண்டு இருப்பதே இதன் வெற்றியை நமக்கு எடுத்துரைக்கும்.



2010இல் இந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு முழுநீள திரைப்படமும் வந்தது. ஓயன் வில்ஸன் தான் மர்மட்யூக் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தார்.



91 வயது வரையில் தனது திறமையால் நம் அனைவரையும் மயக்கிய ஒரு திறமைசாலியின் மரணச் செய்தி நம்மை துக்கத்தில் ஆழ்த்தினாலும், அவரது வாழ்வே கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்பதால், அவரது ஓவியங்கள் கொடுத்த மகிழ்ச்சியை மறுபடியும் ஒரு முறை இரசித்து கொண்டாடுவோம்.
அன்னாருக்கு அஞ்சலி.
நீங்கள் இரசிக்க, அவரது சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்காக.

No comments:

Post a Comment