Monday 28 September 2015

க்ரிஸ்டியன் டெனாயர் - வேய்ன் ஷெல்டன் காமிக்ஸ் ஓவியரின் பிறந்த நாள்

28th September 2015: 1945 - Christian Denayer Artist of Wayne Shelton is born

டியர் காமிரேட்ஸ்,

மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியராக வரவிரும்பிய ஒருவர், கார்களின் மீதிருந்த காதலாலும், காமிக்ஸ் மீதிருந்த ஆர்வத்தாலும் ஓவியரானதே இன்றைய பதிவின் முக்கிய அம்சம்.



சமீபத்திய முத்து காமிக்ஸ் வரவான வேய்ன் ஷெல்டனின் கதையை படித்தவர்கள், அந்த கதையின் ஓவியங்களை / அசுரத்தனமான வேன், கார் மற்றும் பெரிய கண்டெய்னர்கள் நிறைந்த அத்தொடரை இரசிக்காமல் இருக்கவே முடியாது.



அதனை வரைந்த ஓவியர், தன்னுடைய இளம் வயதில் ஆசிரியர் பயிற்சியை முடித்து விட்டு ஒரு ஆசிரியராக வேலைக்கு சேர விரும்பினார். ஆனால், ஓவியங்களின் மேல் கொண்ட காதலால், விளம்பர நிறுவனத்தில் ஆர்ட்டிஸ்ட் ஆக வேலைக்கு சேர்ந்து, பின்னர் படிப்படியாக ஓவியராகவே மாறி விட்டார்.


1966-ஆம் ஆண்டு இவர் நமது ரிப்போர்ட்டர் ஜானி கதாசிரியரை சந்தித்ததே இவரது வாழ்வில் ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்தது.. அந்த சந்திப்புக்கு பின்னர் André-Paul Duchateauஐ தன்னுடைய ஆதர்ஷ நாயகனாக கொண்டு, பல காமிக்ஸ் தொடர்களை இவருடன் சேர்ந்து பணி புரிந்து, அதன்மூலமாக தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார்.



2001-ஆம் ஆண்டு முதல் வான் ஹாம்மே உடன் இணைந்து வேய்ன் ஷெல்டன் கதைகளுக்கு ஓவியம் வரைந்து கொண்டு இருக்கிறார் க்ரிஸ்டியன் டெனாயர்.

இன்று அவருக்கு 70 ஆவது பிறந்த நாள்.

வாழ்த்துகள் ஓவியரே.

No comments:

Post a Comment