Saturday 26 September 2015

தமிழ் காமிக்ஸ் உலகம் - முதல் நிகழ்வு



அன்புடையீர்,

தமிழ் காமிக்ஸ் உலகம் மற்றும் TCU Syndicateன் சார்பாக வணக்கங்கள்.

தமிழ் காமிக்ஸ் உலகின் முதல் காமிக்ஸ் கருத்தரங்கிற்கு உங்களை அழைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த காமிக்ஸ் மற்றும் கிராபிஃக் நாவல் கருத்தரங்கானது நமது ஊடகங்களில் நிலவும் பல தவறான தகவல்களை களையவும், உண்மையான வரலாற்று தகவல்களை எடுத்துரைக்கும் ஒரு களமாகவும் செயல்படும். 



இந்த நிகழ்வின் ஊடே தமிழில் காமிக்ஸ் மற்றும் சித்திரக் கதைகளை படைக்கும் ஒரு அமைப்பும் அறிமுகப்படுத்தப்படும். தமிழில் உலகத் தரத்தில் சித்திரக் கதைகளை கொண்டு வருவதற்கான ஒரு ஆரம்பப் புள்ளியாகவும் இது செயல்படும். மேலும் 
  • காமிக்ஸ் என்றால் என்ன
  • காமிக்சுக்கும், கிராபிஃக் நாவலுக்கும் என்ன வேறுபாடு?
  • தமிழில் வெளியான முதல் சிறுவர் இதழ் எது? 
  •  தமிழின் முதல் கிராபிஃக் நாவல் எது? 
  •  தமிழில் வெளியான முதல் டிஜிடல் காமிக்ஸ் எது? 
  •  தமிழின் முதல் காமிக்ஸ் சிண்டிகேட் எது?
இப்படியாக பல கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் ஒரு நிகழ்வு தான் இது.

நிகழ்வு: காமிக்ஸ் மற்றும் கிராபிஃக் நாவல் பற்றிய கருத்தரங்கு

பங்கேற்போர்: ஓவியர் டிராட்ஸ்கி மருது & கிங் விஸ்வா

நாள் & நேரம்: சனிக்கிழமை மாலை 6:00 மணி

இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், கே கே நகர், சென்னை 78.

நிகழ்வு நிரல்: 

05.30 pm        விருந்தினர் வருகை
06.00 pm        வரவேற்பு மற்றும் பேச்சாளர்கள் அறிமுகம்: ஜீவ கரிகாலன்.
06.30 pm        கதை நிகழ்த்துதல்
07.00 pm        தலைமையுரை: ஓவியர் திரு மருது அவர்கள்
07.30 pm        காமிக்ஸ் மற்றும் கிராபிஃக் நாவல்கள் பற்றிய ஒரு அறிமுகம்
07.15 pm        திரு மருது அவர்கள் TCU Syndicate ஐ அறிமுகம் செய்வார்
07.30 pm        கிங் விஸ்வா -கதை நிகழ்த்துதல்
08.00 pm        காமிக்ஸ் & கிராபிஃக் நாவல்கள் குறித்த உரையாடல்
08.30 pm        கிங் விஸ்வா நிறைவுரை
08.50 pm        நன்றியுரை - யாவரும்.காம் குழுவின் ஜீவ கரிகாலன்
09.00 pm        விருந்தினர் உபசரிப்பு
 
உங்களின் மேலான வருகையை எதிர்நோக்கும் தமிழ் காமிக்ஸ் உலகம் & யாவரும் டாட் காம் குழுவினர்.

நமது இன்றைய நிகழ்வைப்பற்றி தி இந்து தமிழ் நாளிதழில் தகவல் அளித்து இருக்கிறார்கள். நண்பர்களுக்கு நன்றீஸ்.


No comments:

Post a Comment